Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விவசாயிகளுக்கு காப்பீடுத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை: பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு

விவசாயிகளுக்கு அரசு காப்பீடுத்தொகை வழங்காமல் ஏமாற்றி வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார் அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன்.

விவசாயிகளுக்கு
 

இன்று செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர்.பாண்டியன், 'காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் நேரடி விதைப்பு, நடவுப்பணிகள் துவங்கியுள்ளது. சென்ற ஆண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்னும் காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு வழங்காமல் ஏமாற்றி வருகிறது. தீபாவளிக்கு முன்பு முழு இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயிர்காப்பீடு நிறுவனங்களை கண்காணிப்பதற்கு உரிய அதிகாரத்தை தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும். இந்த ஆண்டு தனிநபர் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வறட்சி மாவட்டமாக அரசிதழில் பல மாவட்டங்கள் வெளியிடப்பட்டும்  விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை. அப்படி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும். எனவே, கடன் நிலுவைத்தொகையை முழுமையாக ஒத்தி வைத்துவிட்டு, விவசாயிகள் அனைவருக்கும் இந்த ஆண்டும் மீண்டும் நிபந்தன இல்லா கடன் வழங்வேண்டும். வேளாண் துறையும், விவசாயிகளும் இணைந்து செயல்பட்டு வேளாண்மையை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டும். தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும்வரை அனைத்து ஆறுகளிலும், பாசன வாய்க்கால்களிலும் தொடர்ந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும்' எனறார் அனைத்து விவசாயிகளின் சங்க ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர் பாண்டியன்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close