Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிவகாசி பட்டாசு விபத்து : பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்வு!

சிவகாசியில், கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட பட்டாசு விபத்தில், படுகாயமடைந்து மருத்துவமனையில் இருந்த மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி, திருவள்ளுவர் நகரில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சட்ட விரோதமாக வெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இரண்டு தினங்களுக்கு முன்னர், ஒருவர் மருத்துவமனையில் இறந்தார். மேலும், மூன்று பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்துவந்தனர். இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி மூன்று பேரும் உயிரிழந்தனர். இதனால், பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக, உரிமையாளர் செல்வம் மற்றும் அவரின் அம்மா அன்னபாக்கியம் ஆகியோரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். அவர்கள் மீது 286, 338, 303 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.

- ஆர்.எம்.முத்துராஜ்

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

மாவட்ட செய்திகள் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close