Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீச்சல் பயிற்சியின் போது, தந்தையின் கண் முன்பே சிறுமி உயிரிழந்த சோகம்!

 

 

சென்னை முகப்பேரில் உள்ள நீச்சல் குளத்தில் பயிற்சியின்போது 8 வயது சிறுமி ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். 

நீச்சல்குளத்தில் சிறுமி பலி

Representative image

சென்னை, அம்பத்தூர் அருகேயுள்ள புதுநகரைச் சேர்ந்தவர் பிஜூ. சினிமாத்துறையில் பணியாற்றிவரும் இவர், தனது மகளுக்கு கோடைகாலப் பயிற்சியாக நீச்சல் பயிற்சி அளிக்க முடிவுசெய்துள்ளார். 


இந்நிலையில் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையம் அருகிலுள்ள ஒரு தனியார் நீச்சல்குளத்துக்கு மகளுடன் சென்றுள்ளார் பிஜூ. நீச்சல் குளத்தைக் கண்டு பயந்த சிறுமி பயிற்சியின்போது அதிகளவில் நீரைக் குடித்து மயக்கமடைந்துள்ளார். விரைவாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுமி மருத்துவமனையில் இறந்தார்.


உயிரிழந்த சிறுமி ஆண்ட்ரியா ஒரு தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். மூச்சுத்திணறலால் மரணமடைந்ததாக மருத்துவர்கள் அறிக்கை அளித்துள்ளனர். தற்போது பிரேத பரிசோதனைக்காக சிறுமியின் உடல், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து ஜெ.ஜெ.நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close