Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டிக்கெட் விலைய ஏத்திக்கிட்டுப் போறீங்கன்னு கேட்டவர கொன்னுட்டாங்கையா..! அரசு கண்டக்டர், டிரைவர் மீது பெண் பகீர் புகார்

ஜெயங்கொண்டத்தில் பேருந்து டிக்கெட் விலையேற்றத்தை தட்டிக் கேட்ட பயணி, டிரைவர் மற்றும் நடத்துநரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர்

இது குறித்து உயிரிழந்த ராஜாவின் மனைவி பழனியம்மாள் கூறுகையில், 'நேற்று இரவு உடையார்பாளையத்தில் இருந்து அரியலூர் பேருந்தில் டிக்கெட் வாங்க எனது கணவர் 30 ரூபாய் பணம் கொடுத்தார். இது பிபி சென்னை வண்டி ஒரு டிக்கெட் 30 ரூபாய் என நடத்துநர் கூறியவுடன்  எனது கணவர் 60 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கினார். ஆனால், எல்லா நிறுத்தங்களிலும் ஆட்களை ஏற்றுவதைக் கண்ட என் கணவர் சதாரண வண்டியில மக்களை ஏத்திகிட்டு, பொய் சொல்லி மக்களோட காச புடுங்குறீங்களேனு கேட்டார். இதில் வாக்குவாதம் முற்றி எனது கணவரை டிரைவரும், கண்டக்டரும் கீழே தள்ளி மிதித்தார்கள்.

கொலை

இதையடுத்து போலீஸ் ஸ்டேஷனில் பேருந்தை நிறுத்திவிட்டு இவன் தண்ணிய போட்டு பிரச்னை செய்கிறான். இவரால் பல பயணிகள் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது என போலீஸிடம் எங்களை ஒப்படைத்துவிட்டு சென்றார்கள். காவல் நிலையத்தில் உட்கார்ந்திருக்கும் போதே நெஞ்சு வலி காரணமாக எனது கணவர் தண்ணீர் கேட்டார். கொஞ்ச நேரம் கழித்து நான் தண்ணீர் எடுத்து வந்து கொடுப்பதற்குள் எனது கணவர் உயிர் போய்விட்டது', என்று வயிற்றில் அடித்துகொண்டு அழத்தொடங்கினார். 

இதுகுறித்து எஸ்.ஐ.கமலஹாசனிடம் பேசுகையில், 'அப்போது நான் ஸ்டேஷனில் இல்லை. இறந்தவர் பாடியை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். இப்போது டிரைவர் முருகேசன், நடத்துநர் குமார் இருவரையும் கைது செய்துள்ளோம். இன்னும் விசாரணை முடியவில்லை', என்கிறார். டிக்கெட் விலையை ஏற்றியதைக் கேட்ட ஒரே காரணத்துக்காக எனது கணவரை அடிச்சே கொண்ணுட்டாங்க. எனது கணவரின் இறப்புக்கு நீதி கிடைக்கணும். இல்லையென்றால் சும்மா விடப்போவதில்லை' என்று கொந்தளிக்கிறார் பழனியம்மாள். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

மாவட்ட செய்திகள் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close