Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டாஸ்மாக் கடை முன்பு சமையல்! திருநெல்வேலி மக்களின் விநோதப் போராட்டம்...

நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராக குடும்பத்துடன் மக்கள் சமையல் செய்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 

டாஸ்மாக்

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே இருக்கும் வைத்திலிங்கபுரம் கிராமத்தில் செயல்பட்டுவந்த டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.  மதுக்கடையை அகற்றக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து அப்பகுதி பெண்கள், டாஸ்மாக் மதுக்கடை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடையின் முன்பாக சாமியானா பந்தல் அமைத்து குழந்தைகள், வயதானவர்களுடன் வந்து அமர்ந்த பெண்கள், மதுக்கடைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 

மக்களின் இந்த முற்றுகைப் போராட்டம் பற்றி அறிந்ததும், காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ’இந்த மதுக்கடையை நிரந்தரமாக மூடினால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம். அதுவரை இங்கிருந்து கலைந்து செல்லவும் மாட்டோம்' என பொதுமக்கள் உறுதியாகத் தெரிவித்துவிட்டனர். மேலும் பொதுமக்கள் அதே இடத்தில் பந்தல் அமைத்ததுடன், சமையல் செய்யத் தொடங்கினர். சமையல் செய்து சாப்பிட்ட பின்னர், அங்கேயே அமர்ந்து விட்டனர். இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வழி தெரியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.  
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

மாவட்ட செய்திகள் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close