Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்று முதல் சென்னை-அரக்கோணம் ரயில் சேவையில் மாற்றம்!

இன்று முதல் சென்னை-அரக்கோணம் இடையே, ரயில் சேவையில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை- அரக்கோணம்

மே 20-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை சென்னை-அரக்கோணம் இடையேயான மின்சார ரயில் நேரத்தில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாலங்காடு ரயில்நிலையம் அருகே, மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதால், இந்த ரயில் சேவை மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தப் புதிய மாற்றத்தின்படி, மே 20 முதல் 25 வரையிலான ஐந்து நாள்களுக்கு, சென்னை சென்ட்ரலிலிருந்து அரக்கோணம் செல்லும் ரயில், இரவு 10.45 மணிக்கு புறப்படும். அதேபோல சென்னை கடற்கரையிலிருந்து அரக்கோணம் செல்லும் ரயில், அதிகாலை 1.20 மணிக்குப் புறப்படும். இந்த மாற்றங்களால் இந்தப் பாதையில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் கடம்பத்தூர்- திருவாலங்காடு விரைவுப்பாதையில் இயக்கப்படும். திருவாலங்காடு ரயில்பாதையில்தான் ரயில்வேயின் பொறியியல் மேம்பாட்டுப் பணி நடைபெற்றுவருகிறது. அதனால், மின்சார ரயில்கள் ஐந்து நாள்களுக்குச் செஞ்சினம்பாக்கம் ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும்.

Powered By Tamil Flash News 

உள்ளூர் செய்திகளின் உடனடி அப்டேட்ஸ், தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில்!

இன்ஸ்டால் செய்ய க்ளிக் http://bit.ly/FreeTFN

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

மாவட்ட செய்திகள் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close