Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'விவசாயம் செய்வதே எங்களின் இலக்கு': சூளுரைத்த கதிராமங்கலம் மாணவர்கள்!

யார் யாருக்கெல்லாம் விவசாயம் பார்ப்பதற்கு ஆள் இல்லையோ, அவர்களுக்கு விவசாயம் செய்து கொடுப்பதுதான் எங்களின் அடுத்த இலக்கு என்கிறார்கள் கதிராமங்கலத்தைச் சேர்ந்த மாணவர்கள். 

பத்து நாள்களாக கடைகள் அடைப்பு, நாற்பது நாள்களாக கதிராமங்கலம் மக்கள் போராட்டம் என ஒவ்வொரு நாளும் அச்சத்திலும், பீதியிலும் வாழ்ந்துவரும் கதிராமங்கலம் மக்கள், ஓ.என்.ஜி.சி எனும் கொடிய அரக்கனை எதிர்த்துப் போராடிவருகிறார்கள். 
கதிராமங்கலத்தைச் சேர்ந்த பத்து பேர் மீது வழக்குப் போட்டு சிறையில் அடைத்துள்ளனர். யார் ஆதரவு தருகிறார்களோ அவர்கள் மீது வழக்குப்போடுவோம் என காவல்துறையினர் எச்சரித்தனர்.

 

இந்நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தி, பழநெடுமாறன் தலைமையில் மிகப் பிரமாண்டமாக அமைதிப் பேரணி மற்றும் கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள். போராட்டத்தில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொண்டு எதிர்ப்பைத் தெரிவித்தனர் கதிராமங்கலம் மக்கள். 

கல்லூரி மாணவர் அரவிந்த் லெமூரியனிடம் பேசினோம்," நான் இப்போ பி.எஸ்சி படிச்சுக்கிட்டு இருக்கிறேன். எல்லோரும் சென்னை, மும்பை, பெங்களூர்ன்னு வேலைக்கு போனாதான் மதிப்பா நினைக்கிறாங்க. எனக்கு அதிலெல்லாம் இஷ்டம் கிடையாது. ஏன்னா.. நான் பிறந்த மண் இன்று கார்ப்பரேட் நிறுவனங்களால் சூரையாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதைப் பார்த்துக்கொண்டு என்னால் பொறுமையாக இருக்க முடியல, அதனால போராட்டத்தில் வந்து கலந்துகிட்டோம். நான் விவசாய வேலைத்தான் பார்க்கப் போறேன். யாருக்கு விவசாயத்துக்கு ஆள்கிடைக்கலையோ அவர்களுக்கு போய் விவசாயம் பார்க்கணும். நாங்க படிக்கிற பசங்க எல்லாம் சேர்ந்து அடுத்தக்கட்டமாக விவசாயம் பார்ப்பதாக முடிவு செய்திருக்கிறோம். நாங்கள் படிக்கின்ற நேரம் தவிர மற்ற நேரங்களில் விவசாயம் பார்த்து வருகிறோம். விவசாயம் செய்வதற்கு ஆள் இல்லாமல், யாருக்கு ஆள் தேவைப்படுதோ அவர்களுக்கு போய் விவசாயம் செய்து கொடுப்பதாக பேசிக்கொண்டிருக்கிறோம். எங்களின் அடுத்த இலக்கு சேவை மனப்பான்மையில், விவசாயம் அழிந்துபோய்விடாமல் இருக்க இளைஞர்களை, மாணவர்களை விவசாயத்தில் ஆர்வம் காட்ட வலியுறுத்துவதுதான். மாணவர்களிடையே விவசாயம் பற்றிய  விழிப்பு உணர்வை ஏற்படுத்தி, இலவசமாக விவசாயம் செய்து கொடுப்பதுதான் எங்களின் அடுத்த இலக்கு" என்றார். 

போராட்டத்தில் ஈடுபட்ட பழனியம்மாளிடம் பேசினோம், "நாங்கள் என்ன பாவம் செய்தோம், சடையப்பர் வள்ளல், ஒட்டக்கூத்தர் வாழ்ந்த பூமி எங்கள் பூமி. பச்சை பசேல் என காட்சியளித்த பூமி. நெல், சோளம், கம்பு, கடலை என தினம் தினம் விவசாயம் பார்த்து வந்த நாங்க, எங்கள் கண் முன்னாலே விவசாயம் பொய்த்துப் போய்விட்டதே என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகிறோம். 35 வருஷத்துக்கு முன்னாடி மண்ணெண்ணெய் எடுக்க வர்றாங்கன்னு சொன்னாங்க. அப்ப எங்களுக்கு சந்தோஷமா இருந்துச்சு. பாவி பயலுக இப்படி எங்களை அடியோடு அழிப்பானுங்கன்னு தெரியல. தெரிஞ்சிருந்தா அப்பவே நாங்க போராட ஆரம்பிச்சிருப்போம். இந்நேரம் ஒ.என்.ஜி.சி இல்லாம பண்ணியிருப்போம். எங்க வயலெல்லாம் எண்ணெய் படர்ந்து கிடக்கிறது, நாத்தம் அடிக்குது, குடிக்க தண்ணீர் கிடைக்கல. நிலத்தடி நீர் கெட்டுப்போச்சு. நாங்க எங்கே போவது என்ன பண்ணுவதுன்னு தெரியாம இருக்கிற, எங்களுக்கு ஒரே ஆறுதல் எங்களுக்கு ஆதரவா போராடுகிறவங்கதான், அவங்களையும் கைது செய்திடுவோம்ன்னு சொன்னதுதான் எங்களால் பொறுக்க முடியல (கண் கலங்குகிறார்). எங்க கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் மீது வழக்கு போட்டிருக்கிறார்கள். அவர்களை எந்த நிபந்தனையும் இன்றி விடுதலை செய்யணும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்" என்றார். 
விவசாயத்தின் எதிர்காலம் இனி மாணவர்களின் கையில்...!
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close