Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தடுத்து நிறுத்தும் போலீஸ்... தகிக்கும் கதிராமங்கலம்... அய்யனார் திடலில், அடையாள உண்ணாவிரதம்

59-வது நாளாகப் போராட்டம், ஆர்ப்பாடங்களை நடத்தி வந்த கதிராமங்கலம் மக்கள், இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 


போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று சட்டக்கல்லூரி மாணவர்கள் கதிராமங்கலம் கிராமத்துக்கு வந்துள்ளனர். சட்டக்கல்லூரி மாணவர்களை அனுமதிக்க மறுத்த காவல்துறையினருக்கும் கதிராமங்கலம் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

இதுகுறித்து கதிராமங்கலம் போராட்டக்குழுவை சேர்ந்த அண்ணாதுரையிடம் பேசினோம், "நாங்கள் அறவழியில் போராடி வருகிறோம். போராட்டத்தில் ஈடுபட்ட எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்கள் மேல் மேலும் மேலும் வழக்குகளைத் திணித்து வருகிறார்கள். அவர்களை எந்தவிதமான நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டுமெனவும், கதிராமங்கலத்தை விட்டு ஓ.என்.ஜி.சி நிறுவனமும் காவல்துறையும் வெளியேற வேண்டுமெனவும் போராடி வருகிறோம். எங்களுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று சட்டக்கல்லூரி மாணவர்கள், எங்கள் கிராமத்துக்குள் வந்தனர். அவர்களை ஏன் அனுமதித்தீர்கள், அவர்கள் யாரென்று தெரியுமா? அவர்கள் நக்ஸலைட்டுகள் என்று எங்களைத் திட்டினார்கள் போலீஸார். அவர்களையெல்லாம் ஏன் ஊருக்குள் விடுகிறார்கள். உங்கள் பிள்ளைகளைக் கற்பழித்துவிட்டால் என்ன பண்ணுவது, நாங்களும் அதற்குப் பாதுகாப்புக் கொடுக்கணுமா? எனக் கொந்தளித்துள்ளார்கள். இனிமேல் உங்கள் ஊருக்குள் யாரும் வரக் கூடாது என எச்சரித்தனர். 
எங்கள் கிராமத்துக்குள் வரக்கூடாதுன்னு சொல்வதற்கு இவர்கள் யார்? காவல்துறையினரை உடனே வெளியேற்ற  வேண்டும். எங்கள் பகுதியை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும், கைது செய்யப்பட்டுள்ளவர்களை நிபந்தனைகளின்றி விடுவிக்க வேண்டுமென ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறோம் "என்றார். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close