Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

”குறுவை போச்சு... சம்பா போச்சு... இப்ப இன்சூரன்ஸூம் போச்சு..!” - தவிக்கும் விவசாயிகள்

அங்கொன்றும் இங்கொன்றுமாக விவசாயம் செய்த விவசாயிகள் தங்கள் பயிர்களை காப்பதற்காக, பயிர்க்காப்பீடு செய்திருந்தனர். ஒரு வருடமாகியும், இன்சூரன்ஸ் தொகையை விவசாயிகளுக்கு அரசு வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. 

பரிதவிக்கும் விவசாயிகள்


இன்சூரன்ஸ் தொகை வழங்காதது குறித்து பட்டுக்கோட்டை விவசாயி வீரசேணன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரிடம் பேசினோம்.

”கடந்த ஆண்டு எல்லோரும் பயிர்க்காப்பீடு செய்யுங்கள் என்று அரசுதான் அறிவித்தது. பயிர்க்காப்பீடு திட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம் கூட்டுறவு வங்கிகளில் நேரடியாக 64,190  ஆன்லைன் மூலம் 31,200 விவசாயிகளும் பயிர்க் காப்பீடு செய்திருந்தனர். அதில் நானும் ஒருவன் என்ற முறையில் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தேன். காப்பீடு செய்வதற்கு 31.12.2016 அன்று கடைசித் தேதியாக அறிவித்தது மாவட்ட நிர்வாகம். ஒரு விவசாயி ஏக்கர் ஒன்றுக்கு பிரீமிய தொகையாக அந்தந்த கிராம கூட்டுறவு வங்கிகளில் ரூ.1539 செலுத்தியதற்கு  பிரீமயத்தொகைக்கு இன்சூரன்ஸ் கம்பெனியிலிருந்து எந்த ஆவணங்களும் கூட்டுறவு சங்கத்திலிருந்து வழங்கப்படவில்லை. அண்டை மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டிணம் விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகையை கொடுத்துவிட்டார்கள். தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு மட்டும் ஏன் இன்னும் கொடுக்கவில்லை? உண்மையிலேயே அரசு தஞ்சை மாவட்டத்திற்கு ஒதுக்கவில்லையா? ஒதுக்கிய பணத்தை வேண்டுமென்று விவசாயிகளுக்கு கொடுக்காமல் வைத்திருக்கிறார்களா? என்று தெரியவில்லை. ஓராண்டாகியும் இன்னும் விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் போய் சேரவில்லை என்பது மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தையும், மாவட்ட ஆட்சியரின் செயல்படாத தன்மையையும் காட்டுகிறது. இன்சூரன்ஸ் தொகை வழங்காத நிலையில் 2017ம் ஆண்டிற்கான இன்சூரன்ஸ் பிரீமியத்தொகை விவசாயிகள் கட்டலாம் எனச் சொல்வது வேதனையாக இருக்கிறது.   

விவசாயிவிவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் கலெக்டரிடமே இந்தக் குற்றச்சாட்டை வைத்தோம்.  தஞ்சை மாவட்டத்திற்கு  இன்சூரன்ஸ் தொகை 19 லட்சம்தான் வந்திருக்கிறது என்று சொன்னார் கலெக்டர் அண்ணாத்துரை.  இதுகுறித்து நியூ இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகத்திற்கு போன் செய்து கேட்டபோது, ஒரு அதிகாரி  7 நாட்களில் வந்துவிடும் என்கிறார். இன்னொரு அதிகாரியோ 30நாட்களில் வந்துவிடும் என்கிறார்.  இப்படியே ஒரு வருஷம் ஆகிபோச்சு.

வேளாண்மைத்துறை அலுவலகத்திற்கு சென்று கேட்டபோது ”இப்பத்தான் பிராசஸ் ஆகிட்டு இருக்கிறது . விரைவில் வந்துவிடும்” என்று சொல்லுகிறார்கள். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் குறைதீர்ப்பு கூட்டத்தில், பலமுறை கேள்விகேட்டுவிட்டோம். அவரிடமிருந்து ஒழுங்கான பதில் வரவில்லை, ஒருமுறை 19 லட்சம் என்று சொல்லுகிறார். 6 கோடி என்று சொன்னவர், இப்போது 20 கோடி ரூபாய் வந்திருக்கிறது என்று சொல்லுகிறார். எங்களுக்கு இன்சூரன்ஸ் தொகை கிடைக்குமா? கிடைக்காதா? ஏன் இன்னும் மாவட்ட நிர்வாகம் பதில் சொல்ல மறுக்கிறது. 2017ம் ஆண்டிற்கான பயிர்க்காப்ப்பீடு செய்யுங்கள் என்று உத்தரவிட்டிருக்கிறதே! இது எந்த விதத்தில் நியாயம். இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது. உயர் அதிகாரிகள் இதை விசாரிக்க வேண்டும். 

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஓர்இன்சூரன்ஸ் கம்பெனி கையில் எடுத்திருக்கிறது. அந்த இன்சூரனஸ் கம்பெனிக்கு பிரீமியத்தொகை கூட்டுறவு சங்கங்களின் மூலம் வசூலிக்கப்படும். பிரீமியத்தொகையை கட்டி இன்சூரன்ஸ் செய்ய வேண்டும். இன்சூரன்ஸ் கம்பெனிக்கு அரசு விவசாயிகளிடமிருந்து வசூலித்த பிரீமியத்தொகையை செலுத்தியதா? என்பதே கேள்விக்குறி” என்று கோபத்தில் கொப்பளித்தார்.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close