Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காது, மூக்கு, தொண்டை தொடர்பான மருத்துவ கருத்தரங்கு: சென்னையில் நடக்கிறது

சென்னை: குழந்தைகளுக்கு பல்வேறு காரணங்களால் காது, மூக்கு, தொண்டை  தொடர்பான பிரச்னைகள் அதிகரித்துவருவதை தடுப்பது தொடர்பான கருத்தரங்கு, சென்னையில் நடக்க இருக்கிறது.

குழந்தைகளுக்கு அதிகரித்துவரும் காது கேளாமை சர்வதேச அளவில் மிகப் பெரும் பிரச்னையாக உரு வெடுத்துள்ளது. மாசுப்படிந்த சுற்று சூழல், தூக்கமின்மை போன்ற காரணங்களால் இன்று காது, மூக்கு, தொண்டை போன்று பல்வேறு பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன.

இதைத் தடுப்பது தொடர்பான மாபெரும் மருத்துவ கருத்தரங்கம் ஒன்று, சென்னையில் வரும் 12 ஆம் தேதி நடைபெறுகிறது.

ஹோட்டல் பார்க் ஷெரட்டனில் நடக்க இருக்கும் இந்த கருத்தரங்கிற்கு, மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி தொடங்கி வைக்கிறார். மெட்ராஸ் ஈ.என்.டி ஆராய்ச்சி மைய தலைமை மருத்துவர் மோகன் காமேஸ்வரன் சிறப்புரை ஆற்றுகிறார்.

மேலும், கருத்தரங்கில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, துருக்கி, மலேஷியா, இஸ்ரேல், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 15 சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்டு பேச உள்ளனர்.

காது, மூக்கு, தொண்டை தொடர்பான பாதிப்புகளைப் பற்றிய பல்வேறு சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் என்று நம்பலாம்.

- சே. சின்னத்துரை


(மாணவப் பத்திரிக்கையாளர்)

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close