Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேக ஆரோக்கியத்துக்கு தினம் ஒரு கீரை!

'என்னை... என்ன கிள்ளு கீரைன்னு நெனச்சியா?' - இப்படி பேச்சுவழக்கில் கூட கீரைகளை கிள்ளி எரிந்ததுண்டு. அந்த அளவுக்குக் கீரைகளின் மகத்துவத்தை அறியாமல், ஏழைகளின் உணவாகக் கருதப்பட்டது.  ஆனால், இன்றோ, பல்வேறு நோய்கள் நம்மைத் தேடி வரத் தொடங்கிவிட்டபடியால், சத்துக்களைத் தேடி ஓடுகிறோம்.

''எளிய வகைக் கீரைகளில் ஏராளமான நன்மைகள் இருக்கிறது. அதிலும் ஒவ்வொரு கீரைக்கும் தனித்துவமான சிறப்புண்டு. தினம் ஒரு கீரையை உணவாக எடுத்துக் கொண்டால் மருத்துவச்செலவு என்பது நம் மாத குடும்பப் பட்ஜெட்டில் இடம்பெறாது என்ற உண்மையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவில் மருத்துவத்துக்கான செலவு மட்டும் 78%. நமது பாக்கெட்டுகளைப் பத்திரப்படுத்தி மருத்துவச் செலவிலிருந்து காக்கும் கீரைகளின் நன்மைகளைப் பற்றிய உண்மை தெரிந்தால், கீரைப் பக்கம் கவனத்தைத் திருப்பி விடுவீர்கள். நமக்குக் குறைந்த விலையில் அதிக ஊட்டசத்துகள் நிறைந்த, எளிதில் கிடைக்கக் கூடிய சிறந்த உணவு கீரைகள் மட்டுமே. இவற்றைச் சுத்தம் செய்து, நீரில் அலசி சமைத்து, சாப்பிட வேண்டிய எளிமையான உணவு. மிகச் சீக்கிரத்தில் செரிக்கக்கூடியது. பசியைத் தூண்டும்" என்கிறார் 'நல்ல கீரை' ஜெகந்நாதன்.

அரைக்கீரை

உடல் தளர்ச்சியைப் போக்கி ஊக்கமூட்டும், மலச்சிக்கலைப் போக்கும். குடலின் பலத்தை அதிகரிக்கும், உடல் பித்தத்தைக் குறைக்கும். இதில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து உள்ளது. சரும நோய்களைப் போக்கும். உடலில் இருக்கும் விஷதன்மையை முறிக்கும்.

நீர்முள்ளி

சிறுநீரகக் கல் அடைப்பு உள்ளவர்களுக்குச் சிறந்த மருந்தாகும். மாதவிலக்கு பிரச்னையைச் சீர் செய்யும். தாது விருத்திக்கு நல்லது. அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

காசினி கீரை

சர்க்கரை நோயாளிகளுக்கான வரப்பிரசாதம். இதைச் சாப்பிட்டு வந்தால் இன்சுலின் ஊசி போட வேண்டிய அவசியம் இருக்காது. ரத்தத்தைச் சுத்தப்படுத்தும், பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல், அதிக உதிரபோக்கு போன்றவற்றுக்கு நல்ல மருந்து.

பசலைக் கீரை

இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் இதில் அதிகம். இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு வரும் சில நரம்பு தொடர்பான நோய்களை வராமல் தடுப்பதால் மேலைநாடுகளில் இதைக் கோதுமை, மைதா போன்ற மாவுகளில் கலந்து விற்கிறார்கள். இந்தக் கீரையில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் பார்வைக் குறைபாட்டைத் தடுக்கிறது. மலச்சிக்கலுக்கு எதிரி. நீர் சத்துக்கள் அதிகளவில் உள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது. உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.

கரிசலாங்கண்ணி

சிறுநீரகம் பாதிப்படைந்து வெள்ளை, வெட்டை நோய் ஏற்பட்டால் இந்த நோய்க்கு கரிசலாங்கண்ணி தான் முதன்மையான மருந்து. புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கும் வல்லமை பெற்றது. கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமிநாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டினாலும் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும்.

வல்லாரை

நினைவாற்றலை பெருக்கும். மாலைக்கண் நோய் குணமாகும். தொழுநோய் மற்றும் பால்வினை நோய்ப் புண்களை ஆற்ற சூரணமாகச் சாப்பிடலாம். கட்டுப்போடவும் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. முதுமையைத் தடுக்கும். சருமத்தில் ஏற்படும் நோய்களையும் வல்லாரை குணமாக்குகிறது.

- ப்ரீத்தி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ