Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மதுரையில் ஒரு மீன் மருத்துவர்!

பாண்டிய நாட்டு கொடில மீன் பார்த்திருப்பீங்க. ஆத்தோரம் நீந்தற மீனை பார்த்திருப்பீங்க... கண்ணாடி தொட்டிக்குள்ள பார்த்திருப்பீங்க... ஆனா, நமக்கு டாக்டரா அறிமுகமாகிற மீனை பார்த்திருக்கீங்களா..... பார்க்க பிரியப்பட்டால் வாங்க மதுரைக்கு....

முதன்முறையாக மதுரையில் இதை அறிமுகப்படுத்தியிருக்காங்க. கால்களிலிருந்துதான் பல நோய்கள் உடலுக்குள் ஊடுருவுகின்றன. அதனால் முக்கியமா நாம் கவனிக்க வேண்டிய கால்களுக்குதான் இந்த மீன், வைத்தியம் பார்க்கிறது. அக்குபஞ்சர் முதல் நம்ம ஊர் கோவில்ல ஆணி மிதிக்கிறது வரை எல்லாமே பாதத்திலேயிருந்து தானே ஆரம்பிக்கிறாங்க.

“இந்தப் ''பிஷ் பெடிக்யூர் ஸ்பா'' சிகிச்சை மூலமாக நம் பாதத்தில் இருக்குற அழுக்கு எல்லாத்தையும் மீன்கள் எடுத்திடும். காலும் கூழாங்கல் மாதிரி பள பளவென்று ஆயிடும். சிகிச்சையின்போது மீன் காலை கடிக்கிறப்பவே மூளை வரை புத்துணர்ச்சி பரவும். மனசும் ஒருநிலைப்பட்டு, நம் வேலைகளிலும் முழுக் கவனம் செலுத்த முடியும் என்கிறார்கள்.

சிகிச்சைக்காக வந்திருந்த ரம்யா, மற்றும் தீபா, ''பர்ஸ்ட் டைம் பண்றப்ப பயமா இருந்துச்சு. இப்ப 3 தடவைக்கு மேல பண்ணிகிட்டேன். ரிசல்ட் நல்லா தெரியுது, பஞ்சு மாதிரி ஆயிடுச்சு பாதங்கள். அதை விட, மைன்ட் ரிலாக்ஸ்டா இருக்கு" என்கின்றனர் ஒருமித்த குரலில்.

''இது ஒரு நேச்சுரலான டிரீட்மெண்ட். மனித உடலில் கால்களின் பங்களிப்பு ரொம்ப முக்கியம். அவற்றை நாம் கவனிக்காமல் விட்டால் அது பல நோய்களுக்கு வரவேற்பாளராக மாறிவிடும். இந்த மீன் சிகிச்சை மூலம் நம் உடலில் பல நோய்களை தவிர்ப்பதோடு உற்சாகமான மனநிலையை அடைய முடியும்.

வெளிநாடுகளில் இது ரொம்ப பிரபலம். இந்தியாவில் பெங்களூர், ஹைதராபாத், சென்னைலகூட இருக்கு. இப்போது மதுரையில் ஆரம்பித்திருக்கிறோம். 10 நிமிடம் பண்ணிக்கிறப்ப, கால்கள் ரிலாக்ஸ்டா ஆகிடும். கால்ல ரொம்பப் பாதிப்பு உள்ளவங்க, 6 தடவை இந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால் போதும். இந்தச் சிகிச்சையை ஜாலியா எடுத்துக்கலாம். இதற்கான கட்டணமும் ரொம்ப குறைவுதான்“ என்கிறார்.

உண்மைதான், பாதம் ரொம்ப முக்கியமில்லையா..?

- சி.சந்திரசேகரன்
படங்கள்: நிவேதன்

(மாணவப் பத்திரிக்கையாளர்கள்)


 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ