Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

3ஜி பெற்றோர்... வெல்கம்!

பெற்றோர் கூடிப் பேசும் தளம், ‘பேரன்ட் ட்ரீ’ வெப்சைட். கர்ப்பகாலம், குழந்தை வளர்ப்பு, வீட்டு அலங்காரம், பள்ளி அட்மிஷன், அலுவலகத்தில் சந்திக்கும் பிரச்னைகள்... இப்படி எதையும் இங்கு கலந்துரையாடலாம், ஆலோசனைகள் தரலாம், பெறலாம்!

‘‘பையனோட ப்ரீ.கே.ஜி அட்மிஷனுக்கு இந்த ஸ்கூலுக்குப் போனேன். டொனேஷன் எல்லாம் ரொம்ப அதிகம். ஆனா, அங்க இருக்குற டீச்சர்ஸுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் சரியில்ல...’’



இப்படி தங்கள் அனுபவங்களை தயக்கமின்றிப் பகிர்கிறார்கள் பெற்றோர். அட்மிஷன் துவங்கும் முன்பே ஆன்லைனில் அப்ளிகேஷன் பில் செய்வதைப் பற்றி நீண்ட விளக்கம் கொடுக்கிறார்கள், சென்ற வருடம் பேரன்ட் ட்ரீயில் ஆலோசனை பெற்று, ஸ்கூலில் அட்மிஷன் வாங்கிய பெற்றோர்கள்.

‘‘வேலைக்குப் போற என்னை, என் கணவர் சம்பாதிக்கிற மெஷினா மட்டும்தான் பார்க்கிறார்...” என்று பஞ்சாபில் இருந்து குமுறும் பெண்ணுக்கு, ஆதரவாக, நம்பிக்கையூட்டுவதாக பல கமெண்டுகள், சோகக் கதைகள், தன்னம்பிக்கை சுயகதைகள் பகிரப்படுகின்றன.

‘‘என் பொண்ணுக்கு பூரின்னா இஷ்டம். ஆனா, டெய்லி பூரி செய்ய முடியலையே..?’’ என்று ஒரு மம்மி போஸ்ட் செய்தால், அடுத்த நிமிடம் ஓட்ஸ் பூரி, பால் பூரி, மேத்தி பூரி, குட்டி தோசை, ஸ்டார் தோசை என்று ஐடியாக்களை கொட்டுகிறார்கள் மற்ற மம்மீஸ்.

‘‘நாலரை வயசாகிற என் பொண்ணு கொஞ்ச நாளா ரொம்ப மூர்க்கமா நடந்துக்குறா. அவளை எந்த டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போகலாம்?’’ என்று பரிந்துரை கேட்ட ஓர் அம்மாவுக்கு, ஏகப்பட்ட மருத்துவர் அறிமுகங்கள் தரப்படுகின்றன. இன்னொரு பக்கம், ‘‘டாக்டர்கிட்ட போறதைவிட, நீங்களே அவளை டீல் செய்யுங்க. நீங்க அவளை அடிக்கிற பழக்கம் இருந்தா, உங்ககிட்டதான் அவ அதை கத்துக்கிட்டிருப்பா...’’ என்று பேரன்ட் தவறுகளையும் சுட்டிக் காட்டுகிறார்கள்.

நீங்களும் 3ஜி இணைய யுகத்தின் பெற்றோராகி வலைதளத்தில் கலந்துரையாட...  http://www.parentree.in/India லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்!

 -பிரியா

எடிட்டர் சாய்ஸ்

MUST READ