Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சரும நோய்களுக்கு மருந்தாகும் வேம்பு!

ருக்கு ஊர், தெருவுக்குத் தெரு வேப்ப மரம் இருக்கிறது. அதை ஏதோ குளிர் நிழல் தரும் மரமாக மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். ஆனால், அதன் வேர் முதல் பூ வரை... எல்லாமே மருந்து என்பதை அறிவீர்களா..?!

* தேமல், முகப்பரு போன்றவை நீங்க 5, 6 வேப்பிலையை அரைத்து சாறெடுத்து ஒரு ஸ்பூன் வீதம் தினமும் சாப்பிட்டு வந்தாலே, குணம் பெறலாம். மேலும், வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து தேமல், முகப்பரு உள்ள இடங்களில் பூசியும் வரலாம்.

* இடுப்பில் ஆடைகளை இறுக்கமாக கட்டுவோருக்கு இடுப்புப் புண் வருவதுண்டு. அதிலிருந்து நிவாரணம் பெற, வேப்பிலை, மஞ்சள், கடுக்காயை சம அளவு எடுத்து, வெங்காயச்சாறு அல்லது எலுமிச்சை சாறு விட்டு அரைக்கவும்.

இரவு உறங்கச் செல்லும் முன் அந்தக் கலவையை புண் உள்ள இடங்களில் பூசி வந்தால் சில நாட்களில் பிரச்னை சரியாகும். கூடவே, ஆடைகளைக் கொஞ்சம் தளர்வாக உடுத்த வேண்டியதும் அவசியம்.

* காலில் ஏற்படும் பித்தவெடிப்புக்கும் வேப்பிலை கை கொடுக்கும். வேப்பிலை, மஞ்சள், மருதாணி... இவை மூன்றையும் நன்றாக அரைத்துக்கொள்ளவும். வெந்நீரில் பாதங்களை நன்றாகக் கழுவி துணியால் துடைத்துவிட்டு, அரைத்த வேப்பிலைக் கலவையை வெடிப்புகளில் பூசி வந்தால், பிரச்னை சரியாகும்.

* சொறி, சிரங்கிற்கும் வேப்பிலை நல்ல மருந்து. வேப்பிலையையும், வெங்காயத்தையும் அரைத்து சொறி, சிரங்கு உள்ள இடங்களில் பூசி கால் மணி நேரம் கழித்துக் கழுவவும். இதை ஒன்றிரண்டு முறை செய்து வந்தாலே நிவாரணம் கிடைக்கும்.

* அம்மை நோய் வந்தவர்கள் வேப்பிலையை கீழே போட்டு அதன் மேல் படுத்துக்கொள்வது நல்லது. மேலும் வேப்பிலை அல்லது இளந்தளிருடன் மஞ்சள் சேர்த்து அரைத்து அம்மை கொப்புளங்களின் மீது தடவி வந்தால், நோய் விரைவில் குணமாகும்.

* வயிற்று வலியால் அவதிப்படுவோருக்கு வேப்பிலை நல்ல மருந்து. ஒரு ஸ்பூன் சீரகத்துடன் அதே அளவு வேப்பிலை எடுத்து அம்மியில் நன்றாக அரைத்து, அதன் சாறுடன் சர்க்கரை சேர்த்து, ஒரு 25 மில்லி அளவு தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்று வலி சரியாகும்.

* ம
னநலக்கோளாறு ஏற்படுவதன் ஆரம்ப கட்டத்தில் சிலர் மாறி மாறிப் பேசுவார்கள். அவர்களுக்கு தொடக்க காலங்களிலேயே வேப்பிலையை அரைத்து தினமும் காலையில் சாப்பிடக் கொடுத்து வந்தால், இயல்பு நிலைக்கு வந்துவிடுவார்கள்.

* வேப்பம்பூ தூள் 4 சிட்டிகை அளவு எடுத்து, 2 சிட்டிகை பெருங்காயத்தூளுடன் சேர்த்து வெந்நீரில் கரைத்து சாப்பிட்டால் வாய்வுத் தொல்லை விலகும். இதேபோல், காய்ந்த வேப்பம்பூ தூளை 4 சிட்டிகை எடுத்து இஞ்சிச் சாறில் கலந்து சாப்பிட்டால் அடிக்கடி வரக்கூடிய ஏப்பம் குணமாகும்.

கோடை காலம் நெருங்குகிறது. அப்போது பூக்கும் வேப்பம்பூக்களை சேகரித்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

- எம்.மரிய பெல்சின்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ