Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சுட்டெரிக்கும் வெயில்... தப்பிக்க 10 வழிகள்!

கொடூரமாக கொளுத்தும் வெயில் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இதுவரை 750க்கும் அதிகமானோர் இறந்து விட்டனர். தமிழ்நாட்டில், ஆந்திரா அளவுக்கு வெயில் கொடுமை இல்லையென்றாலும், பகல் வேளைகளில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலும், இரவு வீட்டுக்குள் இருக்கவே முடியாத அளவிற்கு புழுக்கமும் மக்களை வாட்டுகிறது. குழந்தைகள், முதியவர்கள் என பாகுபாடு இன்றி அனைவரும் வெயிலால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் வெயிலில் இருந்து எப்படி தப்பிப்பது?

1.முடியுமானால் அலுவலகத்திற்கு 9 மணிக்கு முன்னதாகவே செல்லுங்கள். அலுவலகத்துக்கு செல்லும்போது ஒரு தண்ணீர் பாட்டில் முழுவதும் மோர் எடுத்து செல்லுங்கள். காபி, டீ தவிருங்கள். வெயில் காலங்களில் ஐஸ் வாட்டர் குடிப்பதால் உடல் குளுமை அடையாது. மோர், இளநீர் போன்றவையே குளிர்ச்சியை தரும்.

2. வீடுகளில், மொட்டை மாடியில் காலை மற்றும் மாலை வேளைகளில் தண்ணீர் ஊற்றுங்கள். இது ஓரளவு வெப்பத்தை குறைக்கும். குழந்தைகளை கிரிக்கெட் போன்ற எந்தவொரு விளையாட்டும் விளையாட காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வெளியில் அனுப்ப வேண்டாம்.

3. முதியவர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் சிறிதளவு பருகிக்கொண்டே இருங்கள். அடிக்கடி சிறுநீர் கழித்தாலும் பரவாயில்லை தண்ணீர் குடிப்பது அவசியம்.

4. வெயில் காலம் முடியும் வரை அனைவருமே ஒரு நாளைக்கு 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்துங்கள். வீட்டில் பிரியாணி, கேழ்வரகு, சாம்பார் சாதம், சப்பாத்தி போன்ற உணவுகளுக்கு பதில் நீர் வகையிலான உணவுகளை அதிகம் எடுத்து கொள்ளுங்கள். காலையில் மோர், இளநீர் போன்றவையும், மதியம் தயிரும், மாலை வேளைகளில் தர்பூசணி பழச்சாறு, நுங்கு ஜூஸ் போன்றவற்றை அருந்துங்கள்.

5. படுத்த படுக்கையாக இருக்கும் முதியவர்களை ஜன்னல் ஓரங்களில் படுக்க வைக்காமல், வீட்டில் நிழல் இருக்கும் இடங்களில் அவர்களை படுக்க வையுங்கள்.

6. வீடுகளில் ப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்த நீர் அருந்துவதை காட்டிலும் மண் பானையில் நீர் ஊற்றி வைத்து மண்பானையில் இருந்து கிடைக்கும் குளிர்ந்த நீர் அருந்துகள்.

7. ஆண்கள் இறுக்கமான உள்ளாடைகளையும், ஜீன்ஸ் போன்றவற்றையும் தவிர்த்து பருத்தியில் (காட்டன்) செய்யப்பட்ட உடைகளை அணியுங்கள். பெண்களும் இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிருங்கள்.

8. வெயிலில் வெளியே செல்பவர்கள் முகம், கை, கழுத்து போன்ற பகுதிகளில் சன் ஸ்க்ரீன் தடவிவிட்டு வெளியே செல்லுங்கள். தரமான கூலிங்கிளாஸ் அணிவது நல்லது.

9. தினமும் இரண்டு முறை தலை முடியை தூய்மையான நீரில்  நன்றாக அலசுங்கள். இரண்டு - மூன்று முறை குளிக்கவும். வீட்டு வாசல்களில், ஜன்னல்கள் வெளியே வாழை இலை தொங்க விடுங்கள்.

10. ஏ.சி. அறையில்  அதிக நேரம் இருப்பவர்கள் காலை அல்லது மாலை வேளைகளில் வெயில் இல்லாத நேரத்தில்  அரை மணிநேரம் நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

-பு.விவேக் ஆனந்த்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close