Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓடி விளையாடு பாப்பா: குழந்தைப் புற்றுநோய் குறித்த குறும்படம்!

ருத்துவ உலகில் தற்போது புற்றுநோயை குணப்படுத்துவது மிக எளிதாகிவிட்டது. புற்றுநோயை குணமாக்குவதற்கு மிக முக்கியமான தேவை பாதிக்கபட்டவரின் மன தைரியமும், தன்னம்பிக்கையும்தான்.

பெரியவர்களுக்கு சரி, ஒரு சிறு குழந்தைக்கு புற்றுநோய் என்று தெரியவந்தால் என்ன செய்வது? அதை எப்படி அந்த குழந்தைக்கு உணர்த்துவது? அது குணம் ஆகுமா? ஒரு சிறு குழந்தைக்கு எப்படி புற்றுநோய் வரும்? என அதிர்ச்சிக்குரிய கேள்விகளை எழுப்பினால்,  நம் அனைவரின் மனதிலும் அது குழப்பங்களையும் கவலைகளையும் ஏற்படுத்திவிடும்.

இதைப் போன்ற குழந்தை புற்றுநோய் (peadiatric cancer) பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,  பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. சென்னையை சேர்ந்த 'சங்கம்' என்ற அமைப்பு, குழந்தை புற்றுநோயை  பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் செயல்பட்டு வருகிறது. தங்களது செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக இதுபற்றிய குறும்படங்களையும் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னையில் உள்ள அடையாறு புற்றுநோய் மையத்தில் 'ஓடி விளையாடு பாப்பா' எனும் குறும்படத்தை திரையிட்டது.  இசையமைப்பாளர் வித்யாசாகர், ஏ.ஆர் ரஹானா , புற்றுநோய் மைய தலைவர் டாக்டர் சாந்தா ஆகியோர் வெளியிட்டனர்.

திரையிடலுக்குப்பின் இக்குறும்படத்தின் இயக்குனர் ஹரி பேசினார்.

அப்போது, "இந்த படத்தின் முக்கிய கதைப் பொருள், குழந்தைகளுக்கும் புற்றுநோய் வரும், அதை மிக எளிதாக குணப்படுத்தி விடலாம் என்பதுதான். தகுந்த சிகிச்சையும், பெற்றோரின் நம்பிக்கையும் அந்த குழந்தையிடம் இருந்தாலே,  அந்த குழந்தையை எளிதில் காப்பாற்றி விடலாம். அதுவும் தற்போது இந்தியாவில் உள்ள மருத்துவ வசதிகளால் கண்டிப்பாக 80% குணப்படுத்த முடியும்.

இது போன்ற நோய் குழந்தைகளுக்கு வரலாம், தகுந்த சிகிச்சை இருந்தால் கண்டிப்பாக இது போன்ற சிறு வயதில் வரும் குழந்தை புற்றுநோயை குணப்படுத்தி விடலாம் என்பதுதான் இப்படத்தின் மையப்பொருள்" என்றார்.

சங்கம் அமைப்பை சேர்ந்த அனுராக் பேசுகையில், " குழந்தை புற்றுநோய் குறித்த இந்த விழிப்புணர்வு பணியை அடுத்த கட்டத்திற்கு கொண்ட செல்ல யோசித்தபோது,  இந்த குறும்படம் எண்ணம் தோன்றியது. முதல் முயற்சியாகதான் இந்த 'ஓடி விளையாடு பாப்பா' குறும் படத்தை வெளியிட்டுள்ளோம்.

இது கண்டிப்பாக மக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறோம்” என்றார்.

- நெல்சன் மேத்யு
படங்கள்: தினேஷ்குமார்

( மாணவப் பத்திரிக்கையாளர்கள்)

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close