Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டாப் ரேமன் நூடூல்ஸ்-க்கும் தடை!

மேகி, Knorr நூடுல்ஸ் தயாரிப்புகளின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டு, திரும்ப பெறப்பட்டிருக்கும் நிலையில், இப்போது இண்டோ நிஸின் (Indo Nissin) நிறுவனத்தின் டாப் ரேமன் (Top Ramen) நூடுல்ஸ் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு (FSSAI) அமைப்பின் உத்தரவின் பேரில், டாப் ரேமன் நூடுல்ஸ்களை திரும்பப் பெறுவதாக இண்டோ நிஸின் நிறுவனம் அறிவித்துள்ளது.

கூடுதலாக ஈயம் கலந்திருந்தது, மோனோசோடியம் குளூட்டமேட்  இருந்ததை சரியாக தெரிவிக்காதது போன்ற காரணங்களால் நெஸ்லே நிறுவனம் சமீபத்தில்தான் சுமார் 30,000 டன் மேகி நூடுல்ஸை திரும்பப் பெற்றது. FSSAI- யிடம் இன்னும் அதிகாரப்பூர்வ ஒப்புதல் பெறாமல் இருப்பதால் ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் தன்னுடைய Knorr இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் தயாரிப்பை நிறுத்தியது. கடைகளில் இருந்த பாக்கெட்டுகளையும் திரும்ப பெற்றுக்கொண்டது.

இண்டோ நிஸின் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் கௌதம் ஷர்மா, “இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் குறித்து FSSAI அமைப்பு ஜூன் 8-ம் தேதி அறிக்கை வெளியிட்டவுடன், அவர்களிடம் டாப் ரேமன் குறித்து விளக்கம் கேட்டிருந்தோம்.  அனுமதி தரும்வரை, டாப் ரேமன் நூடுல்ஸை விற்பனை செய்ய வேண்டாம் என்று அவர்கள் பதில் அளித்துள்ளார்கள். எனவே, விரைவில் FSSAI அமைப்பின் அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம்.

ஏற்கெனவே பல மாநிலங்களில் உள்ள டெஸ்ட் சென்டர்களில் டாப் ரேமன் நூடுல்ஸை சோதனை செய்துள் ளோம். இதில் 2 முறை மட்டும் டேஸ்ட்மேக்கரில் ஈயம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. எனவே மீண்டும் சோதனை செய்ய இருக்கிறோம்” என்றார்.

2013-ம் ஆண்டே FSSAI அமைப்பிடம் டாப் ரேமன் நூடுல்ஸுக்காக அனுமதி கேட்டிருந்ததாம் இண்டோ நிஸின் நிறுவனம். ஆனால் 2 வாரங்களுக்குள் வர வேண்டிய சோதனை முடிவுகள் 2 வருடங்களாகியும் கிடைக்க வில்லை. இப்போது சுமார் 3,000 தயாரிப்புகள் FSSAI -யிடம் சோதனைக்கு இருக்கின்றனவாம்!

- ர. ராஜா ராமமூர்த்தி





 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close