Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'தாய்ப்பால் கொடுத்தால் மார்பகப் புற்றுநோய் வராது!'

வேலைப்பளு, அழகுப் பாதுகாப்பு என்கிற வரிசையில் இன்னும் பல்வேறு காரணங்களை அடுக்கி, பெற்ற குழந்தை பசிக்காக அழும்போது பால்புட்டியை வாயில் திணிப்பவர்கள்தான் இந்த காலத்து படித்து முன்னேறிய நவீன அம்மாக்கள்.

ஆனால், நம் பாட்டிகளும், முப்பாட்டிகளும் இப்படியா இருந்தார்கள்...? கிராமப்புறத்தில் வயக்காட்டில் வேலைக்கு செல்லும்போது கூட தன் பிள்ளைகளுக்கு மரத்தடி மறைவில் பாலூட்டி பசியாற்றியவர்கள் நம் பாட்டிகள். இது இன்றைய சாஃப்ட்வேர் நிறுவனங்களில் சாத்தியம் இல்லைதான். அதற்காக தாய்ப்பாலையே தவிர்ப்பது நல்லதா..?

சேலம் மாவட்டம், நங்கவள்ளியை அடுத்து உள்ள குட்டப்பட்டி புதூரைச் சேர்ந்த விஜயா, மூன்று குழந்தைகளை பெற்றெடுத்தவர். மூன்று குழந்தைகளுக்கும் இரண்டு வருடம் தாய்ப்பால் கொடுத்ததாக கூறும் அவரிடம், தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து  பேசினோம்.

"எனக்கு மூன்று குழந்தைங்க. மூனு குழந்தைங்களுக்கும் தாய்ப்பால்தான். ஒவ்வொருத்தருக்கும் ரெண்டு வருஷம் தாய்ப்பால் கொடுத்தேன். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைங்களுக்கு எந்தப் பிரச்னையும் வந்துடக்கூடாது என்பதற்காகவே குழந்தை பிறந்ததுல இருந்து அஞ்சு மாசம் பத்தியம் இருப்போம்.

சூடான சாதம், சுடுதண்ணியும்தான் குடிப்போம் அந்த அளவுக்கு தாய்ப்பாலுக்கு முக்கியத்துவம் கொடுத்தோம். அப்பெல்லாம் குழந்தை பிறந்தவுடனயே மாரை கழுவிட்டு பால் கொடுத்துடுவோம், இப்ப என்னாடானா ரெண்டு நாள் தாய்ப்பால் கொடுக்ககூடாது. அதுஇதுனு ஆயிரெத்தெட்டு கண்டிஷன் போடுறாங்க, இப்பயெல்லாம் புள்ள பால்குடி மறந்துடுச்சின்னும், பால் சுரக்கலன்னும் சொல்லி சீக்கிரமே தாய்ப்பாலை நிறுத்திட்டு பவுடர் பால் கொடுக்கிறார்கள்.

அப்போதெல்லாம், ஒரு வருஷம் வரைக்கும் எங்களை விடமாட்டாங்க. கீரை, வெள்ளாட்டுக்கறி, கருவாடு, பிஞ்சுக் கத்தரிக்காய்னு பால் ஊறுவதற்கு தேவையான அத்தனை ஏற்பாடுகளையும், சத்தான சாப்பாடு மூலமா செஞ்சிகிட்டே இருப்பாங்க, அதனால நாங்க ஆஸ்பத்திரிக்கு அலையல. பால் கொடுக்குறதையும் நிறுத்தல.

இப்பெல்லாம் அழகு கெட்டுடும்னு சொல்றாங்க, ஒரு அம்மா தான் பெத்த பிள்ளைக்கு பால் கொடுக்கிறதால அழகு கெட்டுபோகுதுனு சொன்னா இந்த உலகத்துல அதவிடக் கொடுமை வேற எதுவும் இல்ல, தாய்ப்பால் கொடுக்குறதால புள்ளைங்களுக்கு மட்டுமில்ல, பெண்களுக்கும் மார்பகப்புற்றுநோய் வராதுனு சொல்றாங்க. * ( ஆகஸ்ட் 1 முதல் 7 வரை தாய்ப்பால் வாரம்)

- எம்.புண்ணியமூர்த்தி

படங்கள்: பா.காளிமுத்து

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ