Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இறந்த பின்பும் வாழலாம்!

டல் உறுப்பு தானத்தை பற்றிய பல மூட நம்பிக்கைகளும், தவறான புரிதல்களும், ஒருவித பயமும் நிலவும் இந்த சமுதாயத்தில், ஒட்டுமொத்தமாக 20  மருத்துவர்கள் உடல் உறுப்பு தானம் அளிக்க முன்வந்திருப்பது ஒரு முன்னுதாரண நிகழ்வாக அமைந்திருக்கிறது சென்னையில்.

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் 1975 ஆம் ஆண்டு மாணவர்களின் நாற்பதாம் ஆண்டு நிறைவு சந்திப்பு விழா, சென்னையில் நடந்தது. கல்லுாரி நண்பர்கள் என்பதால்  தற்போதைய இளசுகளின் கிண்டல், கலாட்டாவுக்கு கொஞ்சமும் குறையாமல் கலகலப்பாக அரங்கேறியது நிகழ்ச்சி. 

இந்த நிகழ்ச்சியில் உலகின் பல்வேறு மூலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் 70 மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் ஏறத்தாழ இருபது பேர், உடலுறுப்பு தானத்திற்காக பதிவு செய்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் பலர் தாங்கள் பணிபுரியும் இடங்களில் அளிக்கவும் பதிவுப் படிவங்களை பெற்றுக்கொண்டனர். இவ்வாறு மருத்துவர்கள் முன்வந்து உடலுறுப்பு தானத்திற்கு பதிவு செய்துக்கொள்வது சாதாரண மக்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவே விளங்குகிறது என்று சொன்னால் அது மிகையல்ல.

“உடலுறுப்பு தானம் இரண்டு வகைப்படும். உயிரோடிருக்கும்போது தானம் செய்வது ஒன்று. இறந்த பிறகு செய்வது இரண்டாம் வகை. மூளைச் சாவு அடைந்த நபரின் குடும்பத்தினரின் ஒப்புதலுடன் அவரின் உறுப்புகளை தேவையானவர்களுக்கு தானம் செய்வதன் மூலம் இறந்த பின்பும் உயிர் வாழலாம்” என்றார் விழாவில் பேசிய நரம்பியல் நிபுணர் கணேஷ் காமத்.

கண் மருத்துவர் ஸ்ரீதரன், “ இறந்தவரின் கண்களின் மேல் துணி ஒன்றை வைத்து அதன் மேல் ஐஸ் கட்டிகள் வைத்த பின் ஆறு மணி நேரத்திற்குள் கண்களை தானம் செய்து விட வேண்டும். உடலுறுப்பு தானத்திற்காக நாம் பதிவு செய்துகொள்வதோடு, இவ்வாறான அடிப்படை விஷயங்களையும் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. இந்தியாவில் உடலுறுப்பு தானத்தில் முன்னோடியாக விளங்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. எனினும் இன்னும் பலருக்கு இது பற்றிய விழிப்புணர்வு இல்லாமலே இருக்கிறது.

உடல் உறுப்பு தானம் செய்ய விரும்பி பதிவு செய்து கொள்ளும் அனைவருக்கும் 'டோனர் கார்டு' ஒன்று தரப்படும். அதை தங்கள் கைப்பையில் எப்பொழுதும் வைத்துக்கொள்ளவேண்டும். முக்கியமாக இந்த விருப்பத்தை தங்களின் குடும்பத்தினரிடம் அவசியம் தெரிவிக்க வேண்டும்' என்றார்.

மதியம் உணவுக்குப்பின், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில்  75 ஆம் ஆண்டு வகுப்பில் படித்த மருத்துவர்களும், அவர்களது குடும்பத்தினரும்  விழாவில் வெகு உற்சாகத்துடன் பங்கெடுத்து அளவளாவினர்.

“இனி நாங்கள் நடத்தவிருக்கும் ஒவ்வொரு சந்திப்பிலும் உடலுறுப்பு தானத்திற்கு பதிவு செய்தது போன்ற பல நல்ல விஷயங்கள் செய்ய திட்டமிட்டுள்ளோம்” என்றனர், இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டை கவனித்த மருத்துவர்கள் சிட்டி பாபு மற்றும் எழிலரசு.

உண்மைதான், இறந்த பின்பும் வாழ உடலுறுப்பு தானம் செய்வோம்!

- கோ. இராக விஜயா


படங்கள்: கிரண்குமார் (மாணவ பத்திரிக்கையாளர்கள்)
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close