Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண்களின் கூந்தல் பராமரிப்புக்கு சில டிப்ஸ்...!

முடி பலவீனப்பட்டு உதிராமல் இருக்க, அன்றாடம் நாம் உபயோகப்படுத்துவதில் என்னென்ன செய்யலாம் என்பது குறித்து சில குறிப்புகள்...

வாரம் இரண்டு அல்லது மூன்று முறை மைல்டு ஷாம்பு போட்டு கூந்தலை வாஷ் செய்ய வேண்டும். காற்றில் மட்டுமே முடியை உலர வைக்க வேண்டும்.சுத்தமான தேங்காய் எண்ணெயே போதுமானது.

கூந்தல் சற்றே முரடாக வறண்டு போனால், எண்ணெயில் செம்பருத்திப் பூவை போட்டு இலேசாக கொதித்தபின், அதைத் தடவி வாஷ் செய்து வந்தால் சாஃப்டாகி விடும். தினமும் பாதாம் எண்ணெயை முடியின் வேர்க்கால்களில் அப்ளை செய்தால் வலுப்பெறும். முட்டையின் மஞ்சள் கருவை முடியில் தேய்த்து சில மணி நேரம் விட்டு வாஷ் செய்தால் டேமேஜைப் போக்கி கூந்தல் நன்றாக வளரும்.

தலைக்கு பயன்படுத்தும் சீப்பு, ப்ரஷ், டவல் ஆகியவற்றை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். ஹேர் டிரையரை உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது.

அகத்திக்கீரை அல்லது பொன்னாங்கன்னி கீரையை அரைத்து தலைக்கு தேய்த்து வந்தால் முடி அடர்த்தியாக வளரும். எண்ணெயுடன் வெந்தயப்பொடியை சேர்த்து, தலையில் தடவி ஊறவைத்து குளித்தால் முடி நன்றாக வளரும்.

புரோட்டீன் சத்து அதிகம் உள்ள உணவை சேர்த்துக் கொண்டால், முடி அடர்த்தியாக வளரும். ஆலிவ் ஆயில் பயன்படுத்தி மசாஜ் செய்து வந்தால், முடி வலிமை பெறும். காற்றழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் அடர்த்தியாக வளரும்.

நரைமுடியைத் தவிர்க்க சிறிது கருவேப்பிலை அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நரை முடி கருமை பெறும். டீ, காபி அதிகம் குடிப்பதால் பித்த நரை உண்டாகும். எனவே, அதை தவிர்ப்பது நல்லது.

மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து, தலையில் தேய்த்து குளித்தால் நரைமுடி மாறும்.

பேன் தொல்லை அதிகமாக இருந்தால், சீத்தாப்பழக் கொட்டையை இரண்டு நாட்கள் காய வைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்கு தடவி குளிக்க வேண்டும்.

பொடுகு நீங்க, வால் மிளகை ஊற வைத்து பால்விட்டு அரைத்து, தலையில் தடவி குளிக்கலாம். தேநீரை வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து தலையில் தேய்த்துக் குளித்தால் முடி பளபளப்பாகும்.

சிறிது சாதம் வடித்த கஞ்சியில் ஷாம்பூவை ஊற்றி தலையில் தேய்த்து குளித்தால், எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி கூந்தல் பளபளபாகும். தேங்காய் பாலைத்தலையில் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும்.

இலக்கியா ரவிச்சந்திரன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ