Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சைக்கிளிங் செல்லலாம் வாங்க!

பொதுவாக ஞாற்றுக்கிழமைகள் என்றால் நமக்கெல்லாம் எப்படி கழியும்? வாரம் முழுக்க செய்த வேலைக்கெல்லாம் சேர்த்து வைத்து அதிக நேரம் தூங்குவோம் அல்லது படம் பார்ப்பது, நண்பர்களோடு கேட்ச்அப் செய்வது என ஜாலியாக செல்லும். ஆனால் சென்னையைச்  சேர்ந்த WCCG (We are Chennai Cycling Group) என்ற சைக்கிளிங் குரூப் ஒன்றிற்கு  இந்த ஞாயிறு முக்கியமான ஒரு நாளாகக்  கழிந்தது.

சைக்கிளிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இன்னும் நிறைய பேரை சைக்கிள் பயன்படுத்த ஊக்குவிக்கவும், இவர்கள் அனைவரும் இன்று(ஞாயிறு) காலை சென்னையில் வெவ்வேறு பகுதிகளில் இருந்து குழுக்களாக சேர்ந்து, புறப்பட்டு, மிதிவண்டியில் பயணித்து சென்னை கத்திப்பாரா ஜங்க்ஷனில் ஒன்று சேர்ந்தனர்.

இந்தியாவில் இதே நேரத்தில் இதே காரணங்களுக்காக 70 இடங்களில் இது போல சைக்கிளிங் செய்திருக்கிறார்கள் என்பது முக்கியமான ஒன்று. “சைக்கிளிங் இந்தியா” என்ற ஹைதராபாத் அமைப்பு ஒன்று இதை “ஐ ரைட் வித் இந்தியா” என்ற பெயரில் தேசிய அளவில் ஒருங்கிணைத்துள்ளது.

அண்ணா ஆர்ச், காந்தி சிலை, மத்திய கைலாஷ், தாம்பரம் ரயில் நிலையம் என நான்கு இடங்களில் இருந்து புறப்பட்ட குழுக்கள் குறைந்தது 5 கிலோமீட்டர் மிதிவண்டியில் பயணித்து கத்திப்பாரா வந்தடைந்தனர். சைக்கிள் ஓட்டுவது இதயம் மற்றும் நுரையீரலுக்கு உதவும் இயற்கையான ஒரு ஏரோபிக் ஆக்டிவிட்டி. ரெகுலராக சைக்கிள் பயன்படுத்துபவரின் சராசரி வாழ்நாள் கூடுவதாகச் சொல்கிறது ஒரு ஆய்வு. உடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதோடு, வண்டிகளில் இருந்து வெளிவரும் புகையால் சுற்றுச்சூழல் மாசுப்படாமல் இருப்பதற்கும் இது உதவுகிறது.

“மூன்று வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட எங்கள் அமைப்பில் 150 ஆக்டிவ் சைக்கிளர்ஸ் இருக்கிறோம். மாதம் சில முறை சந்தித்து குறிப்பிட்ட தூரத்திற்கு சைக்கிளிங் செல்வோம். வாட்ஸ் அப்  மற்றும் பேஸ்புக் கு ரூப்களின் மூலம் இது  குறித்து தொடர்ந்து தொடர்பில் இருப்போம்” என்கிறார் wccg- இன் இணை ஒருங்கிணைப்பாளர் திவாகரன்.

டென்மார்க், நெதர்லாந்த், சீனா மற்றும் பெல்ஜியும் போன்ற நாடுகளில் சைக்கிள் பயன் படுத்துபவர்களின் எண்ணிகை மிக அதிகம். இவர்களின் பாதுகாப்பிற்காக சாலைகளை கூட தனி வழி ஒதுக்கப்பட்டிருக்கும். நம் ஊரிலும் இது போல அதிகம் மிதிவண்டிகள் பயன்படுத்தவும், அது  குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இதுப் போன்ற நிகழ்வுகள் பெரிதும் உதவும் என்றால் அது மிகையல்ல.

 
கோ. ராகவிஜயா
படங்கள்- ஷர்வின்
(மாணவப் பத்திரிக்கையாளர்கள்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ