Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சத்துக்கள் நீங்காத சர்க்கரை...!

ணவுப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ‘‘வெள்ளை நிறத்தில் உள்ள அரிசி, சர்க்கரை, உப்பு ஆகியவை சத்துக்கள் இல்லாதவை. இதை தவிர்த்து விடுங்கள்..’’ என  மருத்துவ வல்லுநர்கள் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் சர்க்கரை தயாரிப்பில் முன்னிலையில் உள்ள நிறுவனமான ஈஐடி பாரி, ‘அம்ரித்’ என்ற பெயரில் புதிய வகை சர்க்கரையை அறிமுகம் செய்ய உள்ளது.

இது குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரமேஷ் பேசும்போது, ‘‘சாதாரணமாக சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை நிற சர்க்கரை தயாரிக்கும் பொழுது, கரும்புசாற்றில் இயற்கையாக உள்ள சத்துக்கள் அகற்றப்படுகின்றன.

ஆனால், எங்களின் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் கரும்புசாற்றில் உள்ள சத்துக்கள் அகற்றப்படாமல் சர்க்கரையிலேயே தங்கிவிடுகிறது. சத்துக்கள் தங்குமாறு உற்பத்தி செய்யப்படுவதால், சர்க்கரை மெலிதான பழுப்பு நிறத்தில் கரும்புசாற்றின் இயற்கையான வாசம் மற்றும் நிறத்துடன் உள்ளது.

இதன் தனித்தன்மையான நிறம் மற்றும் சுவை இந்திய பாரம்பரிய இனிப்பு வகைகள் மற்றும் பானங்கள் செய்ய பொருத்தமாக இருக்ககிறது. இந்த வகை சர்க்கரையில் கரும்பில் இயற்கையாகவே  உள்ள மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மற்றும் பொட்டாசியம் ஆகியவை உள்ளன. மனித உடல் சீரான முறையில் இயங்க இவை மிகவும் அவசியமானவை. வெள்ளை சர்க்கரையில், இந்த சத்துக்கள் குறைவாகவே உள்ளன என்பது குறிப்பிடதக்கது.

இந்திய அளவில் முதல் முறையாக, சத்துக்கள் குறையாத இந்த வகை சர்க்கரையை கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் உள்ள சர்க்கரை ஆலையில்  தயாரித்துள்ளோம். சென்னை மற்றும் பெங்களூருவில் வரும் 18-ம் தேதி, இந்த சர்க்கரை அறிமுகப்படுத்தப்பட உள்ளது’’ என்றார்.

- துரை.நாகராஜன்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ