Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால் உண்டு நன்மை!

'இயற்கை வேளாண்மை   மற்றும் பாதுகாப்பான உணவு' குறித்த கருத்தரங்கம் நாகை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்றது .

இந்தக் கருத்தரங்கத்தை 'நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை மற்றும் நமது நெல்லை காப்போம்' இயக்கம் இணைந்து நடத்தியது. பெண்கள் 100 பேர் உட்பட 300 பேர் கலந்து கொண்டனர்.

"ரசாயன உரத்தையும் பூச்சிக்கொல்லியையும் அதிகமாகப் பயன்படுத்தி வருவதால், பயிர்கள் நச்சுத்தன்மை அடைகிறது. ஒரு காலத்தில் சர்க்கரை வியாதி 50 வயதுக்கு மேல்தான் வந்தது. ஆனால் இன்று 30 வயதிலேயே சர்க்கரை நோய் வருகிறது. அதுக்கு முக்கிய காரணம் பேசிக் ப்ளோரா ( Basic flora) என்று சொல்லக்கூடிய தாவரங்கள் விஷத்தன்மை அடைந்ததுதான்" என்று மருத்துவர் முத்துக்குமார் பேசினார்.



'நலம் தரும் இயற்கை வேளாண் விளை பொருட்கள்' என்ற நூலை  இராமகிருஷ்ணன்  வெளியிட்டார்.  கருத்ததரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் இப்புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. விழாவில் அனைவருக்கும் அவல்,முளை கட்டிய பயிர்கள், தினைப் பாயாசம் ஆகியவை வழங்கப்பட்டன.

"நேற்றைய மனுஷன் வெசத்தை தொட்டான்  கெட்டான், இன்னைய மனுஷன் வெசத்ததான் சாப்பிடுறான்.  பூச்சிக்கொல்லி இல்லாம நாம அரிசி சோறு சாப்பிடுறது இல்ல. இயற்கை முறையில விளைவிக்குற அரிசி 3 மாசத்துக்கு மேல வச்சிருந்தாலே புழு வந்துடும். ஆனா கடைல பைல  விக்குற அரிசி  2 வருசம் ஆனாலும்  ஒண்ணுமே ஆகாது . அதுக்கு காரணம் அரிசி பைகள் பேக்கிங்  செய்யும் போது பூச்சிக் கொல்லியை ஸ்ப்ரே செய்கின்றனர்" என்று இயற்க்கை விவசாயி வீராசாமி பேசினார்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை பல்கலைக்கழக உழவியல் துறை பேராசிரியர் இமயவரம்பன், "இயற்கை வேளாண்மையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் இந்தியர்கள்தான். உலகில் உள்ள பல நாடுகள் நம்மை பார்த்து ஆச்சர்யப்பட்ட விசயம் நம் பின்பற்றி வந்த பாரம்பரியம்தான். அந்தப் பாரம்பரியமான வேளாண்மை எப்பாேது மாறியது என்றால்,  நம் முன்னாேர்கள் விவசாயத்தை வியாபாரமாக பார்க்கவில்லை . வாழ்வியல் கலையாகத்தான் பார்த்தார்கள் என்று வியாபார நோக்கத்தில் மாறினார்களோ அன்றுதான் நம் பாரம்பரிய வேளாண்மையில் இருந்து மாறி உரங்களையும் பூச்சிக்கொல்லியையும் பயன்படுத்த ஆரம்பித்தனர். இயற்கை வேளாண்மை செய்யும் போது மட்டும்தான் நீடித்த சுற்றுச்சூழல் இருக்கும் , நீடித்த வலிமை  மண்ணுக்கு இருக்கும், நீடித்த பொருளாதாரம் இருக்கும், நீடித்த உடல் ஆராேக்கியத்துடன் வாழ முடியும்.

நாம் செய்ய வேண்டியது என்ன வென்றால் வழக்கத்த விட்டு மாறா செஞ்சத கைவிட்டு திரும்ப நம் முன்னோர்கள் பின்பற்றியதை வழக்கத்துக்கு கொண்டு வரணும். இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால் இயற்கை என்றுமே நம்மை கைவிடாது" என்றார்.

கருத்தரங்கில் இயற்கை முறையில்  விளைந்த விதைகள், விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.  இயற்கை பூச்சிக் கொல்லிகள், அரிசி, தினை மாவு, கேழ்வரகு மாவு, எண்ணெய், புத்தகங்கள் ஆகியவை இடம்பெற்றருந்தன. முடிவில் அனைவருக்கும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இயற்கையோடு இணைவோம்... நலமாக வாழ்வோம்!

-மு.ஜெயராஜ்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ