Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை: பிரிட்டன் அரசு ஒப்புதலுக்கு மருத்துவர்கள் வரவேற்பு!

பிரிட்டனில் முதல்முறையாக பத்து பெண்களுக்கு கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சைக்கு அவ்வரசு ஒப்புதல் அளித்துள்ளது.  இது மருத்துவ உலகில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.



கடந்த 2014- ம் ஆண்டு அக்டோபர் 3ல் ஸ்வீடனில் இத்தகைய கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்ணுக்கு பிறந்ததுதான் உலகிலேயே கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பிறந்த உலகின் முதல் குழந்தையாகும். இச்சம்பவம் மருத்துவ உலகில் பெறும் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியதைத் தொடர்ந்து,  பிரிட்டன் அரசு எடுத்துள்ள இவ்முடிவு பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால் ஸ்வீடன் நாட்டைப் போன்று இல்லாமல், பிரிட்டன் மருத்துவர்கள் இறந்த பெண்களிடம் இருந்து பெறப்பட்ட கர்ப்பப்பைகளைக் கொண்டு கர்ப்பை மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய உள்ளனர்.

பிரிடடன் மருத்துவர்கள் 20 ஆண்டுகளாக முயற்சி செய்து இப்போதுதான் கர்ப்பப்பை மாற்று அறுவைச் சிகிச்சைக்கான ஒப்புதலைப் பெற்றுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது, தற்போதைய இவ்வாராய்ச்சி வெற்றிபெற்றால், கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் முதல் குழந்தை 2017-ம் ஆண்டில் பிறக்க வாய்ப்பிருப்பதாக நம்பப்படுகிறது.

 சா.நித்யகுமரன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ