Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசிக்கு மெக்சிகோ ஒப்புதல்!

லக நாடுகளெல்லாம் கொசுக்களைக் கண்டாலே, பயந்து நடுங்குவதற்கு முக்கியக் காரணம் டெங்கு எனப்படும் ஒருவகை நோய். ’ஏடிஸ் ஏஜிப்டி’ எனப்படும் ஒருவகைக் கொசு இனத்தால் பரப்பப்படும் இந்நோய், சாதாரணக் காய்ச்சல் போல் தொடங்கி, உயிரிழப்பையே ஏற்படுத்த வல்லது.
 

ஆண்டொன்றுக்கு, சுமார் 22,000 பேரை, பலிவாங்கும் இந்த நோயைத் தடுப்பதற்கான மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது மருத்துவத் துறைக்கு, ஒரு பெரும் பின்னடைவாக இருந்து வந்தது. இந்நிலையில் 'ஸனோஃபி’ என்ற பிரான்ஸ் மருந்து தயாரிப்பு நிறுவனம் டெங்கு நோய்க்கான மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் கடந்த 20 ஆண்டுகளாக ஈடுபட்டு, ‘டெங்வாக்ஸியா’ எனப்படும்  தடுப்பூசியை வெற்றிகரமாக கண்டுபிடித்து தயாரித்தது.

இந்த மருந்து மெக்ஸிகோவில் சுமார் 40,000 பேர்களுக்கு செலுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த மருந்துக்கு மெக்ஸிகோ நாடு ஒப்புதல் அளித்துள்ளது.




 

ஃபெடெரல் ஆணையத்தின் தர நிர்ணய விதிகளுக்குட்பட்டுத் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தத் தடுப்பூசி, 9 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் மத்தியில், செலுத்திப் பரிசோதிக்கப்பட்டது. அந்த பரிசோதனையின் வெற்றிகரமான விளைவுகளைக் கண்ட ஃபெடெரல் ஆணையம் இந்த ‘டெங்வாக்ஸியா’விற்கு தர நிர்ணயச் சான்றிதழ் வழங்கியுள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் ஆய்வியல் துறைத் தலைவர் ஒலிவியர் சர்மேய்ல் கூறுகையில், "டெங்கு மிகவும் ஆபத்தான ஒரு நோய். சமூக சுகாதாரத்திற்கும், பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கும் டெங்கு பெரும் கவலையை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடு கடந்த இருபதாண்டுகளாக சுமார் 160 கோடி யூரோக்களுக்கும் மேல் செலவழித்து இந்த வெற்றியை அடைந்திருக்கிறோம்; இது மகத்தான கண்டுபிடிப்பு; பல கோடி மக்கள் இதனால் டெங்குவின்
பிடியிலிருந்து காப்பற்றப்படுவர்" என்று தெரிவித்தார்.

இந்தியாவில், 2015 -ம் ஆண்டில் மட்டும் 40க்கும் மேற்பட்டோர் டெங்குவிற்கு பலியாகியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-ச.அருண் (மாணவப் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்