Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவில் சைக்கிளிங் செல்ல சிறந்த 10 இடங்கள்!

சென்னையில் ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர் பக்கம் தலையில் ஹெல்மெட், சைக்கிள், வாட்டர் பாட்டில் என ஒரு கூட்டம் அதிகாலையில் சைக்கிளிங் செய்வதை பார்த்திருப்பீர்கள். உடலினை வலுவாக வைத்திருக்க சைக்கிள் ஓட்டுவது இப்போது மிகவும் பிரபலமடைந்து வருகிறது. உடற்பயிற்சி தாண்டி சைக்கிளிங் என்பது ஒரு ஆர்வமிக்க பயிற்சியாக மாறிவிட்டது. சைக்கிளில் இந்தியாவை சுற்றி வருவது சமீபத்திய ஹாட் டாபிக். இந்தியாவில் சைக்கிள் பயணங்கள் மேற்கொள்ள மிகச்சிறந்த 10 இடங்கள் இருக்கின்றன. வாய்ப்பிருந்தால் நீங்களும் அங்கு ஒரு ரவுண்ட் போய் வாருங்களேன்.

சென்னை -  பாண்டிச்சேரி (
ஈ.சி.ஆர் ) :



மிகவும் பழமையான ஒரு சாலை. காலை நேரங்களில் கடற்கரை காற்றும், ஈரமும் உங்களின் மனதை வருடிச்செல்லும்.  கடற்கரையில் அமைந்த சாலையில் பயணிப்பது மிகவும் இனிமையானதாக இருக்கும்.


மும்பை -  டாமன் :



வடக்கு மும்பையில் இருந்து 170 கி.மீ., தொலைவில் இருக்கிறது டாமன். கண்டிப்பாக இரண்டு, மூன்று நாட்களாவது நமது பயணத்தை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். மிகவும் இனிமையான பயணம் மேற்கொள்ள நினைப்பவர்களுக்கு நல்ல சாய்ஸ்.


சோம்நாத் -  டையூ ( குஜராத் )



கடற்கரையின் ஊடே தென்னை மரங்கள் நிறைந்த சாலை இது. அதிக போக்குவரத்தும் இருக்காது. மிகவும் ரம்மியமான இயற்கை எழில் சூழ்ந்த பகுதி. பயணிக்கும் போதே உங்களை மிகவும் இலகுவாக்கும்.


ராமேஸ்வரம் :



இரு புறமும் கடல் நீர் சூழ்ந்திருக்க,  நடுவில் இருக்கும் சாலையை பார்த்த உடனே உங்களின் மனம் கொள்ளை கொள்ளும். சொல்லப்போனால் இந்தியாவிலேயே அமைந்த அழகான சாலை என்று இதனை சொல்லலாம்,


கூர்க் - மூணாறு :



கர்நாடக மாநிலத்தின் மலைப்பிரதேசமான கூர்க்கில் இருந்து கேரள, தமிழ்நாட்டு எல்லையான மூணாறு செல்வதுதான் இந்த பயணம். காபி,டீ தோட்டங்கள் நிறைந்த மலைப்பகுதி வழியேதான் நமது பயணம் இருக்கும். எங்கு பார்த்தாலும் பச்சைபசேல் காட்சிகள், வளைந்து நெளிந்து செல்லும் சாலைகள், இதமான குளிர் என வாழ்வின் அழகியலை உணர வைக்கும் இந்த பயணம்.


லே -  கார்துங் லா :


உலகிலேயே மலை மீது அமைந்த உயரமான சாலையில் சைக்கிள் ஓட்டுவது மிகவும் வித்தியாசமான அனுபவம். சியாச்சின் மலைப்பிரதேசத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்தால், கார்துங் லா சென்று சேர 2 நாட்கள் ஆகலாம். அழகோடு சேர்ந்து ஆபத்துகளையும் கொண்டிருக்கும் இடம். நீங்கள் சைக்கிள் எக்ஸ்பர்ட் ஆக இருந்தால் கண்டிப்பாக ட்ரை செய்யுங்கள்.


மணாலி -  லே :
 


மிகவும் கடினமானதாக இருந்தாலும், சுகமான அனுபவத்தைத் தரக்கூடிய பயணமாக இது அமையலாம். அதிகாலை சூரிய ஒளி பட்டு பனி,  கண்ணாடி போல உருகிக் கொண்டிருக்கும் வேளையில், இதமான குளிர் காற்றோடு பயணிக்கும் அனுபவம் உங்களுக்கு இனிமையானதாக இருக்கும். உங்களின் மனோதிடத்தை பரிசோதித்துக் கொள்ள ஏற்ற ஒரு பயணமாக இது கண்டிப்பாக அமையும்.


கேங்க்டாக் -  நாது லா ( Nathu La)  கணவாய் :



சிக்கிம் மாநிலத்தில் அமைந்திருக்கும் பகுதி இது. இந்திய - சீனா எல்லைக்கு மிக அருகில் அமைந்திருக்கும் இடம். பயணிகளை ஈர்க்கும் ஒரு இடம். சிக்கிம் மாநிலத்தின் கலாச்சார தொன்மையும், அழகியலையும் ஒரு சேர ரசிக்க வைக்கும்.


மங்களூர் -  கோவா  :



கடலை ஒட்டிய சாலையில் பயணிக்க வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள் ? அப்படி என்றால் உங்களுக்கு உகந்த சாலை இதுதான். ஒரு புறம் மரங்களடர்ந்த கடற்கரையையும், மறுபுறம் சுபர்னிகா ஆற்றையும்  ஒட்டியே சாலை நீளும். அதன் அழகு உங்களையும் உள் இழுத்துக் கொள்வது நிச்சயம்.


கேரள கடற்கரை சாலைகள் :



கடவுள் தேசமான கேரளத்தில் பயணிப்பது என்றுமே சுகமான சுகானுபவம்தான். அதிலும் கடற்கரை சாலைகளில் காலை வேளையில் சைக்கிள் ஓட்டுவது உங்களுக்கு நிச்சயம் புத்துணர்வைக் கொடுக்கும். புதிய அனுபவமாகவும் இருக்கும்.

தை எல்லாம் நீங்களும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்களேன்...

எடிட்டர் சாய்ஸ்

MUST READ