Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தன் மரணத்தை தானே வடிவமைத்த பெட்ஸி!

மெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர், 41 வயதான பெட்ஸி டேவிஸ்.  Amyotrophic Lateral Sclerosis என்ற, குணப்படுத்த முடியாத நரம்புக்கோளாறு நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு மரணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் அதை அடையும் காலம்வரை தாங்கமுடியாத வேதனையுடன் பெட்சி காத்திருக்க வேண்டிய நிலை. இந்நிலையில்தான், ‘மருத்துவர் உதவியுடன் தற்கொலை’ assisted suicide என்ற முடிவை எடுத்தார் பெட்சி.

அமெரிக்காவில், இந்த அசிஸ்டட் சூஸைடை சட்டப்படி அங்கீகரிக்கும் ஐந்தாவது மாகாணமாக கலிஃபோர்னியா சமீபத்தில்தான் இணைந்திருக்க, அதன்படி மருத்துவர் முன்னிலையில் அளவுக்கதிக டோஸில் மருந்து உட்கொண்டு தற்கொலை செய்துகொள்ளும் முடிவை எடுத்த பெட்ஸி, அதை செயல்படுத்தியது உருக்கம்.

கடந்த ஜூலை மாதத் தொடக்கத்தின் வார இறுதியில் நாட்களில் ஒரு விழா ஏற்பாடு செய்திருந்த பெட்ஸி, பல்வேறு நாடுகளிலும் இருந்த 30க்கும் மேற்பட்ட தன் நண்பர்களை, ‘அன்பிற்குரிய தைரியமான மறுபிறப்பு பங்காளர்களே... என் இறுதிப்பயணத்தை தொடக்கிவைக்க வாருங்கள்’ என்று மின்ஞ்சலில் அழைத்தார். நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும், ‘உங்களுக்கு என்ன தோணுகிறதோ செய்யுங்கள், பேசுங்கள். ஆனால் என் முன் யாரும் அழக்கூடாது’ என்ற விதிமுறையைச் சொன்னார். தாங்கமுடியாத வேதனையில் இருந்து மரணம் அவருக்கு விடுதலை கொடுக்கும் என்பதைப் புரிந்துகொண்ட அவரின் நண்பர்களும் அதற்கு இசைந்தனர்.

பெட்ஸிக்கு பிடித்த பீட்ஸா, காக்டெயில், திரைப்படம், ரியாலிட்டி டான்ஸ், இசை என அனைத்தும் அங்கு நிகழ்ந்தன. இறுதியில், பெட்ஸியின் சகோதரி விருந்தினர்கள் அனைவருக்கும், அவர்கள் பெட்ஸியின் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதைச் சொல்லும் குறிப்புடன் ஒரு பரிசளித்தார்.

நிகழ்வின் இறுதியில், ஜப்பானிய உடை அணிந்துவந்த பெட்ஸி, தன் ஆயுளின் கடைசி சூரிய அஸ்தமனத்தைப் பார்த்தார். குறிக்கப்பட்ட மாலை 6:45 மணிக்கு அவரின் மருத்துவர் மற்றும் சகோதரியின் முன்னிலையில் மருந்துகள் கொடுக்கப்பட்டன. நான்கு மணி நேரம் கழித்து பெட்ஸியின் உயிர் பிரிந்தது.

 

‘பெட்ஸி, அவர் விரும்பிய வகையில் அழகான மரணத்தை தனக்கு ஏற்படுத்திக்கொண்டார்’ என்றார் பெட்சியின் நண்பர் ஆல்பெர்ட்.

 

 

ரெஸ்ட் இன் பீஸ் பெட்ஸி!

- ச.புகழேந்தி
(மாணவப் பத்திரிகையாளர்)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ