Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எடையைக் குறைக்கும் 5 உணவுகள்!

தினமும் ​அரை மணி நேரம் மூச்சிரைக்க ஓடுவார்கள்; பிறகு யோகா​. சிலர்​ ‘டயட்டில் இருக்கிறேன்’ எனப் பெருமையாகச் சொல்லிக்கொள்வார்கள். உடல் எடையைக் குறைக்கப் பாடுபடுபவர்கள் செய்யாத முயற்சிகளே இல்லை எனலாம். ஆனால், இவர்களில் பெரும்பாலோர் கண்டுகொள்ளாத விஷயம் ஒன்று உண்டு. அது, அவர்கள் உண்ண வேண்டிய சில முக்கியமான உணவுகள். ஆம், டயட்டில்​ இருப்பதோடு, சில​ உணவுகளையும் உண்டோமேயானால்​, உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை​ விரைவில்​ கரைக்க முடியும். அப்படிக் கொழுப்பைக் கரைக்கக்கூடிய 'ஃபேட் பர்னிங்'​ ​(Fat burning) காய், கனி​ வகைகள் என்னவென்று தெரிந்துகொள்வோமா? 


1. எலுமிச்சை
இந்தப் பட்டியலில் முதல் இடம்​,​ எலுமிச்சைக்குதான். எலுமிச்சையில் ​'​வைட்டமின் சி​'​ ​ சத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் 'சி' நிறைந்த அனைத்து உணவுகளுமே, கொழுப்பைக் கரைக்கக்கூடியவை. காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில்ச்சைச்சாறு​ கலந்து​ குடித்தால், உடலில் உள்ள ​கழிவுகளை அகற்றும்​.​ வைட்டமின் 'சி'​ சத்து,​ கொழுப்பைக் கரைக்கும். அது மட்டுமல்லாமல், தொடர்ந்து எலுமிச்சைச் சாறு அருந்திவந்தால், இருமல், ​சளி, தலைவலி, அஜீரணக் கோளாறு ஆகியவை ​வராது.


2. சோம்பு
சோம்பு, ​தாதுச்சத்து நிறைந்த உணவுப் பொருள். இதில் கலோரிகள்​ குறைவு​. ​உடலின் ​செரிமான சக்தியை, சோம்பு அதிகப்படுத்தும்​. இரவுவதற்கு முன்​,​ சோம்பை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து, காலையில்​ அந்த நீரைக் குடிக்க ​வேண்டும். அதேபோல, ​​செரிமானத்துக்குக் கடினமான உணவுகளைச் சாப்பிட்டபின் சிறிதளவு சோம்பு மெல்வது நல்லது.


3. கிரீன் டீ
வேறு எந்த உணவிலும் இல்லாத அளவுக்கு ஆன்டிஆக்ஸிடன்ட்​ சத்துக்கள் கிரீன் டீயில் உள்ளன. இதில்​ பாலிஃபினால்​ ​(​Polyphenol​) ​எனப்படும் ​சத்துக்களும் நிறைந்துள்ளன. சர்க்கரை இல்லாமல் தினமும் கிரீன் டீ பருகிவருவது, உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கும். இதில் உள்ள ​இதர சத்துக்கள்​ உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக்கூடியவை.


4. தர்பூசணி
தர்பூசணி முழுக்க முழுக்க நீர்ச்சத்து நிரம்பியது. தவிர, தர்பூசணியில் ஏராளமான அளவு வைட்டமின்களும் ​தாதுக்களும் உள்ளன. இது உடல் எடையைக் குறைக்க உதவும். தர்பூசணி, கொழுப்பை நம் உடலில் சேர விடாமல் ​தடுக்கும்​.​ தொப்பையைக் குறைக்க விரும்புபவர்கள்​,​ உடற்பயிற்சி​,​ டயட்டோடு​ அவசியம்​ சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவு​ தர்பூசணி​.

5.​ குறுக்காக வெட்டிப் பயன்படுத்தக்கூடிய​ காய்கறிகள்:
இதை ஆங்கிலத்தில்​ க்ரூஷிஃபெரஸ் வெஜிடபிள் (Cruciferous vegetable​)​ என்று அழைப்பர்​. அதாவது, குறுக்காக வெட்டினால்​தான் இந்தக் காய்கறிகளைப் பயன்படுத்த முடியும்.​ ​ காலிஃபிளவர், முட்டைக்கோஸ், புரோகோலி போன்ற ​காய்கறிகள் இவ்வகையைச் சேர்ந்தவை. இவற்றில் ​நார்ச்சத்துகளும் அதிகம். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்​,​ கொழுப்பைக் குறைப்பதோடு​,​ நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கும்.​

உடல் எடையைக் குறைக்கப் போராடுபவர்களே..! இனி, உங்கள் உணவில் ​இந்த ஐந்து வகை உணவுகளும் இருக்குமல்லவா?!

-​ ​ந. ஆசிபா பாத்திமா பாவா

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ