Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீங்கள் உங்கள் குழந்தையை எப்படி தூங்க வைக்கிறீர்கள்?

பெரும்பாலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக தூங்க வைப்பதில்லை என ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.

'10-21 சதவீதம் குழந்தைகள் ஆபத்தான சூழலிலேயே உறங்க வைக்கப்படுகின்றனர். அதாவது, பெட்டின் ஓரத்தில் தூங்க வைப்பது, சீதோசண நிலை மாற்றத்தைக்  கவனிக்காமல் உறங்க வைப்பது, டேபிள் ஃபேனிற்கு அருகில் உறங்க வைப்பது போன்றவற்றால் பெரும்பாலும் குழந்தைகள் இறக்க நேரிடுகிறது என்கிற சமீபத்திய ஆராய்ச்சி முடிவு.  

குழந்தைகள் பெரும்பாலும் பலதரப்பட்ட சூழலில் வளர்க்கப்படுகின்றனர். குளிப்பாட்டுவது முதல் குழந்தைகளை தூங்க வைப்பது வரை என குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய பல விஷயங்களை தாய்மார்கள் பல நேரங்களில் தவறாகவே செய்கின்றனர்மு என்கிறது ஆய்வு முடிவு ஒன்று.

முன்பெல்லாம் கிராமப்புறங்களில் குழந்தைகளைகளை ஆரோக்கியமாக வளர்த்து வந்தனர். அதற்குக்  காரணம் கூட்டுக்குடும்ப வாழ்க்கை.  தாத்தா, பாட்டி என ஒரு சேர கூட்டுக் குடும்பமாக வாழும்போது பல விஷயங்களை அவர்களிடமிருந்து கற்று வந்தோம். ஆனால், தற்போது வளர்ந்து வரும் பணி சூழல் மற்றும் சமூக மாற்றங்களால் பலரும் தனிக்குடும்பத்தில் வாழ்ந்து வருகின்றனர். என்னதான் மருத்துவர்கள் 'இன்ச் பை இன்ச்' சொல்லி கொடுத்தாலும், பிராக்டிகலாக அதைச்  செய்து பார்க்கும்போது பல தவறுகளைச்  சந்திக்கிறோம்.

ஆக மொத்தத்தில் குழந்தை வளர்ப்பு என்பது தனி கலை.

சமீபத்தில் American Academy of Pediatrics வெளியிட்டுள்ள ஆராய்ச்சி முடிவில்,

''பச்சிளங்குழந்தைகள் தூக்கத்தின் போது இறப்பது என்பது அதிகப்படியாக நடக்கக் கூடிய ஒன்றுதான். இதை  SIDS (sudden infant death syndrome) என்று சொல்வோம். 10-21 சதவீதம் குழந்தைகள் ஆபத்தான சூழலிலேயே உறங்க வைக்கப்படுகின்றனர். அதாவது, பெட்டின் ஓரத்தில் தூங்க வைப்பது, சீதோசண நிலை மாற்றத்தைக்  கவனிக்காமல் உறங்க வைப்பது, காற்று குறைவாக உள்ள இடங்களில் தூங்க வைப்பது, டயாப்பர் மாற்றப்படாமல் அப்படியே பல மணி நேரங்கள் விட்டுவிடுவது, என பல இடைஞ்சலான இடங்களிலேயே குழந்தைகள் உறங்க வைக்கப்படுகின்றனர்." என்று கூறப்பட்டுள்ளது.

குழந்தைகளை உறங்கவைக்கும் போது தேவை அதிகக் கவனம்!

-வே. கிருஷ்ணவேணி

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ