Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கேசத்தைப் பறித்த கேன்சரால் தன்னம்பிக்கையை அசைக்க முடியாது!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த 17 வயதுப் பெண், ஆண்ட்ரியா சியரா சலஸர். பள்ளியில் படிக்கும்போதே தன் கனவான மாடலிங்கிலும் தடம் பதித்தார். ஒருநாள் தூங்கி எழுந்தபோது கழுத்து ஒரு பக்கமாக வலித்தது. மெதுவாகக் கை வைத்து தடவிப் பார்த்தவருக்கு அதிர்ச்சி. பெரிய அளவில் உருண்டை ஒன்று கைகளில் தென்பட்டது.

இனம்புரியாத பயம் ஆண்ட்ரியாவைப் பிடித்துக்கொள்ள, உடனடியாக மருத்துவரிடம் சென்றார். பரிசோதனைகள் எடுக்கப்பட்டன. ‘எந்த ஆபத்தும் இருக்கக்கூடாதுஎன்று வேண்டிக்கொண்டிருந்த ஆண்ட்ரியாவிடம், ‘உங்களுக்கு நாடுலர் செலராஸிஸ் ஹாட்ஜ்கின் லிம்ஃபோமா... கேன்சரின் இரண்டாம் நிலைஎன்றார் மருத்துவர்.

கண்கள் இருண்டன அந்தச் சிறு பெண்ணுக்கு. தலையில் கைவைத்து, தொண்டை கிழிய கத்தி அழ வேண்டும்போல் இருந்தது. ஆனாலும் கண்ணீர் துளிகளால் தன் நோய் தீராது என்பதைப் புரிந்துகொண்டவர், கீமோ சிகிச்சைக்குத் தயாரானார்.

நோய் எதிர்ப்புசக்தியை அளிக்கும் வெள்ளை இரத்த அணுக்களில் உருவாகும் நாடுலர் கேன்சரால் இப்போது இளம் வயதினர் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் என அமெரிக்காவின் கேன்சர் சொசைட்டியால் சுட்டிக்காட்டப்படும் இந்நோய், வெகுவேகமாக உடலின் எந்தப் பாகத்திலும் தனது ஆதிக்கத்தை உருவாக்க வல்லது.

ஆண்ட்ரியா, தன்னை ஆட்கொண்ட கேன்சரை கீமோ சிகிச்சையினால் எதிர்க்கத் தொடங்கினார். சிகிச்சையின் பக்கவிளைவாக கேசத்தை இழக்க நேரிடும் என்றாலும், மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு இரும்பாக இருந்தார். சிகிச்சை தொடங்கிய சில நாட்களிலேயே அவர் கர்வமாக நினைத்து வந்த அவரின் அழகு, கண்ணாடியில் கோர முகம் காட்டியது. அடிமனதில் ஒளித்துவைத்த கண்ணீர் ஆர்ப்பரித்து வெளியில் வந்தது. ஆனால் அவர் இதயம், ‘தைரியமும் போராடும் குணமும் மட்டுமே நிலையான அழகுஎன்பதை மந்திரம்போல் சொல்லிக் கொண்டிருந்தது.

 

சிகிச்சை முடித்த கையோடு, மொட்டைத் தலையோடு தன் மாடலிங் துறைக்கு ரீ என்ட்ரி கொடுத்தார் ஆண்ட்ரியா. நண்பர் ஜெரார்டோ கார்மெண்டியாவுடன் ஃபோட்டோ ஷூட்டுக்குத் தயாரானார். கேமராவை தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டார். அந்தப் படங்களை ஆண்ட்ரியா தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சற்று நேரத்தில், அது ஒரு லட்சம் ஷேர்களை எட்டியது. அடுத்த ஒரு மணி நேரத்தில் வைரல் ஆனது. மக்களின் பாசிட்டிவ் கமென்ட்கள், வாழ்த்துகள், பிரார்த்தனைகளால் அவரது டிவிட்டர் பக்கம் இப்போது நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறது.

கேன்சர், எனக்கு அழகின் உண்மையான அர்த்தத்தை கற்பித்திருக்கிறதுஎன கண்கள் மின்ன கூறிச் சிரிக்கிறார் இந்த இளம் பெண்!

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ