Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இது எந்த வகைக் காய்ச்சல்..? பரபரப்பில் திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி அருகே உள்ள காவேரி ராஜபுரம் மற்றும் ஆதி ஆந்திர காலனியில் பலர் மர்ம காய்ச்சலுக்கு கடந்த ஒரு மாதமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியாகினர். கலெக்டர் சுந்தரவல்லி மற்றும் பொது சுகாதாரத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் அங்கு சென்றார். மர்ம காய்ச்சல் என்று முதலில் சொன்ன சுகாதாரத்துறையினர் டெங்கு என்று ஒத்துக்கொண்டனர்.


தினமும் காய்ச்சலுக்கு பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கிராம மக்கள் பீதியடைந்து வருகின்றனர். காவேரிராஜபுரம், ஆதிஆந்திரகாலனி ஆகிய இரண்டு கிராமங்கள் மட்டுமல்லாமல் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு இருக்கிறது. இதனால் சிகிச்சை பெற அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது. குழந்தைகள், மேல்சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 24ம் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக காலை 7 மணி நிலவரப்படி 87 பேர் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அன்றைய தினம் மாலை 7 மணியளவில் இந்த எண்ணிக்கை 99 ஆனது. ஆகஸ்ட் 25ம் தேதி காலை 7 மணி நிலவரப்படி 34 ஆண்களும், 34 பெண்களும், 18 ஆண் குழந்தைகளும் 16 பெண் குழந்தைகள் உள்பட 102 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 8 பேருக்கு இந்த எண்ணிக்கை மாலை அதிகரிக்கும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் அதை தடுக்க போர்கால நடவடிக்கையை மாவட்ட நிர்வாகமும், பொது சுகாதாரத்துறையும் எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


ஸ்டாலின் ஆறுதல்


எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ஆகஸ்ட் 24ம் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கும், திருத்தணி காவேரிராஜபுரம், ஆதி ஆந்திர காலனி ஆகிய கிராமங்களுக்கு சென்று ஆறுதல் கூறினார். பிறகு டெங்குவை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

எஸ்.மகேஷ்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்

MUST READ