Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை

                                                                              

குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாதபோது அவர்களை மருந்து, மாத்திரை சாப்பிட வைப்பதற்குள் நம் விழி பிதுங்கிவிடும். மாத்திரை, சிரப், கேப்ஸ்யூல், டானிக் என்று வெவ்வேறு வகைகளில், வெவ்வேறு சுவைகளில் மருந்துகள் வருகின்றன. பெரும்பாலும், குழந்தைகள் கசப்பான மருந்தை சாப்பிடாது. அதற்காக, அழுது, ஆர்ப்பாட்டம் செய்யும் குழந்தைகளைப் பார்க்கப் பாவமாக இருக்கும். அதற்காக மருந்து கொடுக்காமல் இருக்க முடியுமா? அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு மாத்திரை, மருந்துகள் தருவது எப்படி?
1. முதலில் கொடுக்க வேண்டிய மாத்திரையை நன்கு பொடித்துக்கொள்ளுங்கள்.
2. குடிநீரை நன்றாகக் கொதிக்கவிட்டு, பின்னர் அதை நன்றாக ஆறவிடுங்கள்.
3. அதில் மிகச் சிறிதளவு தேனைக் கலக்குங்கள்.
4. பின்னர், குடிநீரும் தேனும் கலந்த கலவையில் பொடித்துவைத்த மாத்திரைத் தூளை சேர்த்து, நன்றாகக் கலக்கி குழந்தைக்குக்  கொடுக்கலாம்.
குறிப்பு : டெட்ராசைக்கிளின் போன்ற மிகவும் கசப்பு நிறைந்த மருந்துகளுக்கு, தேன் சிறிது அதிகம் சேர்த்துத் தரலாம்.
இதுபோன்று, மாத்திரையைப் பொடியாக்கி, தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது, மருந்தின் அளவு அதிகமாகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


மருந்து கொடுக்கும் முறை:
1. குழந்தைகளின் தலையைத் தாழ்த்தி, நேராகப் படுக்கவைத்த நிலையில் மருந்துக்களைக் கொடுக்கக் கூடாது.
2. முதலில் குழந்தையை அமர வைத்து, குழந்தையின்  தலைக்கடியில் நம் கையை வைத்துத் தூக்கி, மருந்தைக் கவனமாகக் கொடுக்க வேண்டும்.
3. மயங்கிய நிலையில் இருக்கும் குழந்தைக்கோ, தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தைக்கோ மருந்து கொடுக்கக் கூடாது.
4. வலிப்பு(Fits) உள்ள குழந்தைக்கு, வலிப்பு ஏற்படும் சமயங்களில் அதற்குண்டான மருந்தைக் கொடுக்கக் கூடாது.
5. காசநோய் பிரச்னை உள்ளவர்களுக்கு, மருந்து கொடுக்கும்போது, தேன் கலந்து தரக்கூடாது. காசநோய் மருந்துகளில் உள்ள உட்பொருளான ஐசோனியாசிட்டின் வீரியத்தை, தேன் குறைத்துவிடும்.
பெரியவர்களுக்கான அளவு மட்டுமே குறிப்பிட்டு உள்ள மருந்தை குழந்தைக்குக் கொடுக்கக்கூடாது. 
மருந்து, மாத்திரைகளை நீங்களாகச் சென்று கடையில் வாங்கித் தராதீர்கள். உரிய டாக்டரிடம் ஆலோசனை பெற்று, அதன்படி சாப்பிடுவதே மிகவும் நல்லது.


- தி.ஜெயப்பிரகாஷ்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ