Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாதவிடாயை நிர்ணயிக்கும் ஆறு காரணிகள் இவைதான்!

 

மாதவிடாய் என்பது, இனப்பெருக்க உள் உறுப்புகளின் செயல்பாடு என்றாலும், வேறு சில புறக் காரணிகளும் அந்தச் சுழற்சியைத் தீர்மானிப்பதாக உள்ளன. அவற்றை சொல்கிறார் சென்னை சேர்ந்த மகப்பேறு மருத்துவர் மனு லட்சுமி.

1.நம்புங்கள்... உங்கள் அறைத்தோழி அல்லது உங்களுடன் தங்கியிருக்கும் மற்றொரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியும், உங்கள் மாதவிடாய் சுழற்சிக்கான நேரத்தை நிர்ணயிக்கும் காரணியாகச் செயல்படக்கூடியது. 'பீரோமோன்ஸ்' என்கிற ஹார்மோன் இதற்கு வழி செய்கிறது. நீங்கள் எந்தப் பெண்ணுடன் அதிக நேரம் செலவிடுகிறீர்களோ, அவர்களுடன் உங்கள் பீரியட் நேரங்கள் ‘சின்க்’ ஆவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு.

2. உடை எடையைக் குறைக்க, ஷேப் ஃபிட்டாக இருக்க என உடற்பயிற்சியை ஒரேயடியாக அதிகரிக்கிறீர்களா? அது உங்களின் மாதவிடாய் சுழற்சி தேதியை நிச்சயம் மாற்றியமைக்கும். மேலும் உதிரப்போக்கு இயல்பைவிட அதிகரிக்கவும் வாய்ப்புகள் உண்டு!

3. நைட் ஷிப்டில் வேலை செய்யும் பெண்களுக்கு சரியான, முறையான, ஆழ்ந்த தூக்கம் இருக்காது. இவர்களுக்கு பீரியட்ஸ் நேரங்களில் நிச்சயம் மாற்றம் இருக்கும்.

4. திடீரென்று ஏற்படும் தீவிர உடல்நல குறைவும் ஒரு காரணம். உடலில் எதிர்ப்பு சக்தி இல்லாமல் மாதவிடாய் சுழற்சியின் நாட்களை தள்ளிப்போடும்.

 

 

5. வேலை, படிப்பு, குடும்பக் காரணங்களால் உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் ஹார்மோன்களைப் பாதிக்கும். அந்த ஹார்மோன் சமச்சீரின்மையால் கருமுட்டை உருவாதல், கர்ப்பப்பைத் தயாராதல் போன்ற சுழற்சியில் மாறுதல்கள் ஏற்பட்டு மாதவிடாய் சுழற்சிக் காலம் இயல்பைவிட நீளும் அல்லது குறையும். எனவே மனஅழுத்தம் வேண்டாம் ப்ளீஸ்!

6. குறுகிய காலத்தில் அதிகமாக உடல் எடை அதிகரித்தாலும், குறைந்தாலும் நாட்கள் தள்ளிப்போகும். பெரும்பாலும் இப்போது அதிக உடல் எடை அதிகரித்து , நாட்கள் தள்ளிபோகும் பெண்கள் அதிகரித்து வருகிறார்கள்.

- தா. நந்திதா (மாணவப் பத்திரிக்கையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ