Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குழந்தைகளின் தின்பண்டங்களில் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்

 

உங்கள் குழந்தை சரியான எடை, வளர்ச்சி, ஆரோக்கியம் இல்லை எனப் புலம்பும் பெற்றோரா நீங்கள்? உங்கள் குழந்தையின் ஆரோக்கியமான உடல்நிலைக்கு உத்திரவாதம் கொடுக்கும் ஆரோக்கிய டிப்ஸ் வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த நியூட்ரீஷியனிஸ்ட் பிரியா ராஜேந்திரன்.

ஸ்நாக்ஸ் பாக்ஸை வண்ணங்களின் அடிப்படையில் பிரிக்கலாம்.

சிவப்பு: தர்பூசணி, மாதுளை, சிவப்பு கொய்யா, பீட்ரூட், ஆப்பிள்
ஆரஞ்சு - கேரட், பப்பாளி
மஞ்சள் : வாழைப்பழம், அண்ணாசி பழம்,சுண்டல்,
வெள்ளை: காளான்,காலிஃபிளவர்,முட்டை,பன்னீர், சீஸ், தயிர், வெள்ளரி,
பச்சை: பயறு வகைகள், வெள்ளரி, பச்சை திராட்சை
கருஞ்சிவப்பு: நாவல் பழம், திராட்சை, முட்டைக்கோஸ்.

என வண்ணங்களின் அடிப்படையில் பிரித்து, தினமும் ஒரு வண்ணம் என்று கொடுத்து அனுப்புங்கள்.

உங்கள் குழந்தை படிக்கும் பள்ளியில் கேண்டினைச் சுத்தமாக வைத்திருக்கிறார்களா? என்ன மாதிரியான பொருட்கள் விற்பனை செய்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் வாங்கி கொள்வதற்கு பணம் கொடுத்து அனுப்புவதைத் தவிர்க்கவும். அதற்கு பதில் வீட்டில் செய்த தின்பண்டங்களைக் கொடுத்து அனுப்பலாம்.

 

காலாவதியான பொருட்களை, சில கடைகளில் விற்பனை செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, பொருட்களை வாங்கும் முன் அது தயாரிக்கப்பட்ட தேதியை ஒருமுறை பார்க்க கற்றுகொடுங்கள்.

உங்கள் பிள்ளைகளின் நண்பர்கள் யாருக்காவது வித்தியாசமான சாக்லேட், புகையிலைப் பொருட்கள் எடுத்துக்கொள்ளும் வழக்கம் இருந்தால் .உங்கள் பிள்ளையை அவர்கள் தரும் எதையும் வாங்கி சாப்பிடக்கூடாது என்று கண்டிப்பாக சொல்லுங்கள்.

பிரபல பிராண்டுகளை காப்பியடித்து அதேபோன்று தரமற்ற பொருட்களைத் தயார் செய்து விற்கின்றனர். அதைச் சாப்பிடுபவர்களுக்கு வாந்திபேதி ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பொருட்களின் பெயரைச் சரியாக வாசித்து பார்த்து வாங்க அறிவுறுத்துங்கள்.

புகையிலை, போதைப் பொருட்களின் தீமை குறித்து அவ்வப்போது உங்கள் குழந்தையிடம் பேசுங்கள், குழந்தைகள் தவறுதலாக எதேனும் போதைப்பொருளை வாங்கி சாப்பிட்டு இருந்தால் உடனே மருத்துவரை அனுகுங்கள்.

குழந்தையின் பள்ளிக்குச் சென்று அவர்கள் பள்ளிக்கு அவ்வப்போது அங்கு விற்கப்படும் தின்பண்டங்களை நோட்டம் இடுவது நல்லது. அப்படி தவறான பொருட்கள் விற்கிறார்கள் எனில் பள்ளி நிர்வாகத்திற்கு அதைத் தெரியப்படுத்துவது நல்லது.

ஸ்நாக்ஸ் பாக்ஸில் எண்ணெய் நிறைந்த உணவுப்பொருட்கள் தவிர்த்து பாதாம், பிஸ்தா போன்று உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருட்களைக் கொடுத்து அனுப்புங்கள்.

குழந்தைகள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறார்களா? என்பதையும் பரிசோதிப்பது அவசியம்.மோர், சூப் வகைகள், பானகம் போன்றவற்றையும் குழந்தைகளுக்கு கொடுத்து அனுப்புவது நல்லது.

- சு.சூர்யா கோமதி.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ