Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என்னாச்சு.... குழந்தை ஏன் அழுவுது?

 

குழந்தைகளின் அழுகை, ஒரு மொழி. அதை சரியாகப் படிக்கத் தெரிந்தவர்கள் அம்மாக்களே. பச்சிளம் குழந்தைகளுக்கு எப்போது பசிக்கும் என்பதும் அழுகையின் காரணமும் அம்மாக்களுக்குத் தெரியும் என்றாலும், இளம் தாய்மார்களுக்கு அவ்வளவாகப் புரிவதில்லை. அதற்கு, குழந்தையின் மீது கொண்ட அக்கறையும் பயமுமே காரணம்.

பேருந்தில் போகும்போது அல்லது பலர் கூட்டமாக இருக்கும் இடங்களில்... அழும் குழந்தையின் அழுகையை நிறுத்த, அருகில் இருப்பவர்கள் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்துவார்கள். சிலர் விளையாட்டுக் காட்டுவார்கள். சிலர் பயமுறுத்தி அடக்கப் பார்ப்பார்கள்.  சிலர் அவர்கள் விரும்பு தின்பண்டங்களை வாங்கித் தந்தும் அழுகையை நிறுத்தப் பார்ப்பார்கள். ஆனால், அந்தக் குழந்தை எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்துவிட்டு, இன்னும் சத்தமாக அழும். அந்தச் செயல் எல்லோரையும் சிரிக்க வைத்துவிடும்.

குழந்தைகளின் அழுகைக்கு என்ன காரணம் என்பதையும், அமைதிப்படுத்தும் வழிகளையும் சொல்கிறார், குழந்தைகள் நல மருத்துவர் என்.அரவிந்த்.

பொதுவாக, குழந்தைகளின் அழுகைக்கு மூன்று காரணங்களைச் சொல்லலாம்.
1. பசியினால் அழலாம்
2. வயிற்றில் உள்ள வாயு வெளியேறுவதற்காக
3. சிறுநீர் கழிப்பதற்காக

குழந்தைகள், இவை போன்ற அசாதாரண நிலையைத் தெரிவிப்பதற்காகவே அழுவார்கள்.

சில குழந்தைகள், அம்மாவின் அரவணைப்பைத் தேடி அழும். சில, அம்மா நம்மை ரொம்ப நேரமாக கவனிக்கவில்லையே என்பதற்காக அழும். ஈ, எறும்பு தொந்தரவு இருந்தாலும் படுக்கை வசதி சரியில்லாமல் இருந்தாலும் அழுவார்கள்.

பிறந்த குழந்தை, பால் குடித்து வயிறு நிறைந்துவிட்டால், இரண்டரை அல்லது மூன்று மணி நேரம் வரை தூங்கும். அரை மணி நேரத்துக்குள் அழுதால், என்ன பிரச்னை என்பதை அறிய வேண்டும். டாக்டரிடம் காட்டி, அதைச் சரிசெய்ய வேண்டும். நான்கு, ஐந்து மாதங்கள் வரைதான் இந்தப் பிரச்னைகள் இருக்கும்.

 

சற்று வளர்ந்த குழந்தைகளுக்கு:

கூட்டமான இடங்களில் இரைச்சலாக இருப்பது, சுவாசிக்க போதுமான காற்று இல்லையென்றால், பூச்சிக் கடித்திருந்தால், வயிறு வலித்தால், குளிர் காலத்தில் மற்றும் சளி இருந்தாலும் காது வலிக்கும் இவற்றாலும் குழந்தைகள் அழக்கூடும்.

 

குழந்தையைப் பாதுக்காக்கும் பெற்றோர் கீழ்காணும் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

1. தாய்ப்பால் முழுமையாகக் கொடுக்க வேண்டும்.
2. கதகதப்பாக வைத்துக்கொள்ளவும்.
3. குழந்தையைத் தூக்கும் முன், நம் கைகளைச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.
4. ஜலதோஷம் உள்ளவர்கள் தூக்கக்கூடாது.

குழந்தைகளின் விருப்பம்:
மிதமான காற்றும் லேசான சூரிய ஒளியும் குழந்தைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

இப்படியெல்லாம் உங்கள் குழந்தையைப் பார்த்துக்கொண்டால், எப்போதும் புன்னகைதான்.

-கே.ஆர்.ராஜமாணிக்கம்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ