Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மழை நீரை அப்படியே அருந்தலாமா?


மழைநீரை அப்படியே அருந்தலாமா?


மழைக்காலம் நெருங்கியிருச்சு,மழைத்தண்ணீரை பாத்திரங்களில் சேகரித்து பயன்படுத்தலாமா?அப்படி பாத்திரங்களில் பிடிக்கும் மழைநீர் எந்த அளவு சுத்தமானது, ஆரோக்கியமானது என்பதை அறிவியல் நிபுணர் சுல்தான் அகமது இஸ்மாயில் விளக்குகிறார்...
 நமக்கு கிடைக்கும் மெட்ரோ தண்ணீரை விட மழைநீர் பன்மடங்கு சுத்தமானது. அதை தாரளமாக குடிப்பதற்கும் சமையல் செய்வதற்கும் பயன்படுத்தலாம். ஆனால்  மழைநீரை சேமிக்கும் பாத்திரம் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்.

மழைநீரை குடிப்பதற்காக சேமிக்கிறீர்கள் எனில் மழை பெய்ய ஆரம்பித்த கால் மணி நேரத்திற்கு பிறகு தான் சேமிக்க வேண்டும். ஏனெனில் மழை பெய்ய ஆரம்பித்த உடன் காற்றில் இருக்கும் தூசிகள் மழை நீரில் கலந்து விடும்.அதனால் தண்ணீர் மாசு அடையும் என்பதால் சிறிது நேரம் மழை பெய்த பிறகு சேமிப்பது நல்லது.இதனால்வீட்டின் ஓடுகள்,குழாய்களைல் படிந்திருக்கும் தூசிகள்  மழைநீரில் அடித்துச் செல்லப்படும்.அதன் பிறகு சேமித்து பயன்படுத்தும் போது தண்ணீர் சுத்தமாக இருக்கும்.நீண்ட நாட்கள் பயன்படுத்தமுடியும். 


உங்கள் வீட்டில் கட்டப்பட்டு இருக்கும் பிரத்யேக தொட்டிகளில் மழைநீரை  சேமித்து அதனை தினப் பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப் போகிறீர்கள் எனில் தொட்டியை பாசி பிடிக்காமல் வைத்துக்கொள்ளுங்கள். மேலும் அந்த தண்ணீரை குடிக்க,சமைக்க பயன்படுத்துகிறீர்கள் எனில், ப்யூரிஃபையிங் மிஷின் மூலம் சுத்தம் செய்த பின் பருகுவது நல்லது.
மழைநீராக இருந்தாலும் 5 நாட்களுக்கு பிறகு அதில் நுண்ணுயிரிகள் வளர ஆரம்பிக்கும் என்பதால் 5 நாட்களுக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.அல்லது தண்ணீர் வைக்கும் பாத்திரத்தை மாற்றிக்கொண்டே இருங்கள்.
நிலத்தில் இருந்து கிடைக்கும் நிலத்தடி நீரை விட மழைநீரில் மினரல்ஸ் குறைவாக இருக்கும் என்பதால் மழைநீரை பருகும் போது சிறிது உப்பு ,சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்.ஆனால் உணவில் உப்பு,சர்க்கரையை இயல்பாகவே அதிகம்  சேர்ப்பவர்கள் மழைநீரில் இவற்றை சேர்த்து தான் பருக வேண்டும் என்ற அவசியம் இல்லை. மழைநீரை கொதிக்கவைத்து பயன்படுத்துவது நல்லது.

 

   
.
                                                                                                                                                                                                                          சு.சூர்யா கோமதி.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close