Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹிலாரி கிளிண்டன் - ஜெயலலிதா போன்ற தலைவர்கள் டி - ஹைட்ரேட் ஆவது ஏன்? 

                             
 

வியாழன் இரவு போயஸ் கார்டனில் தமிழக முதல்வர் ஜெயலலிதா காவிரி பிரச்னை குறித்த ஆலோசனை கூட்டத்தில் விவாதித்துக்கொண்டிருந்தபோது 9.30 மணியளவில் உடல் நலக் குறைவு ஏற்பட்டு உடனடியாக  சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சில மணி நேரம் கழித்து “திடீர் காய்ச்சல் மற்றும் உடலில் ஏற்பட்ட நீர் வறட்சி காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிகிச்சை பெற்றுவருகிறார்" என்ற செய்திக் குறிப்பை வெளியிட்டனர். தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருக்கும் அவரின் உடல்நிலை தற்போது தேறிவருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


இதே போன்றதொரு சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவிலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் 11 அன்று, அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டதன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அன்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட இருக்கும் ஹிலாரி கிளிண்டன் கலந்து கொண்டார். அந்த சமயத்தில் தனக்கு ஏற்பட்ட "டீஹைட்ரேஷன்"  எனும் உடல் நீர் வறட்சி பிரச்னை காரணமாகக் கூட்டத்தை விரைவில் முடித்துக்கொண்டு அவசரமாகக் கிளம்பினார். அப்போது, அவருக்குத் திடீர் தலைச் சுற்றல் ஏற்பட, உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. அதற்கு முன்பும்கூட "டீஹைட்ரேஷன்" காரணமாக ஓரிருமுறை அவர் மயக்கம் அடைந்துள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபரும் ஹிலாரியின் கணவருமான பில் கிளிண்டன் தெரிவித்திருந்தார். தேர்தல் நேரத்தில் தொடர் பிரசாரங்களில் ஈடுபடுவதால், குறிப்பிட்ட இடைவெளியில் முறையாக தண்ணீர்க் குடிக்காமல்போனதால், ஹிலாரியின் உடலில் நீர் வறட்சி ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

                                                   
அரசியல் தலைவர்கள் மட்டும் அல்ல. தொடர்ந்து அலைச்சல் ,பயணம் என்றே தங்களின்  வாழ்க்கையை வடிவமைத்துக்கொண்டு வெயிலில் அலைபவர்கள் அனைவருக்கும் ஏற்படக்கூடிய பொதுவான பிரச்னை, உடலின் சராசரி நீர் அளவு குறைதல்.  இதை "டீஹைட்ரேஷன்" என்கின்றனர். 
அரசியல் தலைவர்கள் பலரும் பிரசாரங்களுக்கும், பொதுக்கூட்டங்களுக்கும் செல்லும்போது, மேடையில் தொடர்ந்து பல மணி நேரம் உரையாற்றுவது வாடிக்கை தான். பரபரப்பான பணிகளுக்கிடையே நேரத்துக்குச் சாப்பிடாமல், தூங்காமல், போதுமான அளவு  தண்ணீர் குடிக்காமல்  நாள் கணக்கில், மாதக் கணக்கில் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்வதால்,  உடலில் உள்ள நீர் வற்றத் தொடங்குகிறது.
நமது உடல் 60 முதல் 70 சதவிகிதம் நீரால் ஆனது. உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு 60 - க்கும் குறைவான அளவு நீர் குறைந்தால், திடீர் தலைச்சுற்றல், மயக்கம் ஏற்படலாம். நீண்ட நாள்  நீர் வறட்சியின் காரணமாகச் சிறுநீரகம் பாதிக்கப்படலாம். கோடை காலம் மட்டும் அல்லாமல் எல்லா நாட்களிலும் நாம் நமது உடலின் நீர் அளவைப் பராமரிக்க வேண்டியது அவசியம். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை, ஒவ்வொரு நாளும் அனைவரும் போதுமான நீர் அருந்த வேண்டியது அவசியம்.

உடல் நீர் வறட்சி 
மனித உடலில் 60 - 70 சதவிகிதம் நீர் இருக்க வேண்டும். நம் உடலில் இருந்து வெளியேறும் நீருக்கு இணையாக நாம் நமது உணவு மற்றும் தண்ணீர் மூலம் நமது உடலில் உள்ள நீரின் அளவை உடனுக்குடன் சமன் செய்துவிட வேண்டும். நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள கலோரிகள் குளூக்கோஸாக மாற்றப்பட்டு, உடலில் சேமிக்கப்படுகிறது. உடல் இயக்கத்துக்குத் தேவையான சக்தி, குளூக்கோஸ் மூலமாகவே பெறப்படுகிறது. வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவற்றின் மூலமாக உடல் நீர் வெளியேறினால், உடலின் நீர் அளவு குறையும். கோடை காலங்களில் வெயிலில் அலைபவர்களின் உடலில் நீர் வறட்சி அதிகமாகும். உடல் தட்பவெப்பத்தைச் சமன் செய்ய, அதிகமாக வியர்வை வெளியேறுவதால், சிறுநீரின் அளவு குறையும்.  எனவே, அனைவரும் கட்டாயம் தண்ணீரை அதிகளவில் பருக வேண்டும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள்,  சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள், டயாலிசிஸ் செய்துகொள்பவர்கள் ஆகியோர் மட்டும் மருத்துவரிடம் உரிய ஆலோசனை பெறாமல் தண்ணீர் அதிகம் குடிக்கக் கூடாது. 
இவர்களது சிறுநீரகத்தின் செயல்பாட்டின் அளவைப் பொறுத்தே தண்ணீர் குடிக்க மருத்துவர் பரிந்துரைப்பார். டைப் - 1 மற்றும் டைப் -  2 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்குக் கணையத்தில் இன்சுலின் சுரப்பு குறைந்துவிடும். இதனால், குளூக்கோஸை உடைத்து உடல் இயக்கத்துக்குத் தேவையான சக்தியைப் பெற முடியாமல் போகும். உடல் இயக்கத்துக்குத் தேவையான சக்தியைப் பெறுவதற்காக உடலில் உள்ள கார்போஹைட்ரேட் உடையத் தொடங்கும். இதனால், கீடோன்ஸ் (Ketones) என்னும் அமிலம் உடம்பில் சுரக்கத் தொடங்கும். இந்த நிலைக்குப் பெயர் கீடோசிஸ் (Ketosis). 

 


கீடோசிஸ் ஏற்பட்டால்  இதனால், டைப் - 1  சர்க்கரை  நோய் உள்ளவர்களுக்கு கீடோஅசிடோசிஸ் (Ketoacidosis) என்னும் நிலை ஏற்பட்டு ரத்தத்தில் அமிலத்தன்மை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. முதற்கட்டமாக தலைச்சுற்றல், மயக்கம் போன்றவை ஏற்படும். இது முற்றினால் மூளைக்குச்  செல்லும் ரத்த ஓட்டம் தடைப்பட்டு, "கோமா" நிலைக்குச் செல்லும் வாய்ப்பைக் கூட்டும். இவ்வாறு மயக்கம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். இவர்களுக்குத் தொடர் கண்காணிப்பு தேவை. உடலில் குறைந்த நீர் மற்றும் குளூக்கோஸ் ஆகியவை ட்ரிப்ஸ் மூலம் ஏற்றப்படும். இவர்களது சிறுநீரில் உள்ள ரத்தச் சர்க்கரை அளவு சிறுநீர் ஸ்ட்ரிப் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இப்போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உடனுக்குடன் கண்டறிந்து சிகிச்சை அளிக்கக் கூடிய கண்டினியுவஸ் குளூக்கோஸ் மானிட்டரிங் (Continuous glucose monitoring  - CGM) எனும் மின்னணு இயந்திரங்கள் வந்துவிட்டன. இதனை நோயாளியின் உடலில் பொருத்துவதன் மூலமாக, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. உடல் நீர் வறட்சியால் மயக்கமடைந்தவர்களை மருந்து, மாத்திரைகள் மூலம் உடனடியாகக் குணப்படுத்த முடியாது. உடலில் தொடர்ந்து நீர் வறட்சி ஏற்பட்டால்,  சிறுநீரகம் பாதிக்கப்பட்டு. சிறுநீர்ப் பையில் கற்கள் ஏற்படலாம். தசை அசைவுகளுக்குத் தேவையான நீர் இல்லாததால் தசைப்பிடிப்பு, இறுக்கம் ஏற்படலாம்.


உடலில் நீர் வறட்சி ஏற்படுவதைத் தடுக்க... தவிர்க்க..!
10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இவர்களது உடலில் 75 சதவிகிதம் நீர் உள்ளது.
வயது அதிகரிக்கும்போது தாகம் ஏற்படுவதும், உணவு உட்கொள்ளும் அளவு ஆகியவையும் குறையும். 50 வயதுக்கு மேற்பட்ட, சர்க்கரை நோய் உள்ளவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில்,  தங்கள் சர்க்கரையின் அளவைப் பரிசோதித்துக்கொள்வதை கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும்.
வெயில் காலங்களில் உடலில் நீர் வறட்சி ஏற்படும். வெயில் காலங்களில் சராசரியாக மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

 

 


சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிகம் தண்ணீர் குடிப்பது தவறு. இதனால், சிறுநீரகங்களுக்கு அதிக வேலை கொடுக்க வேண்டியிருக்கும். இவர்கள் தண்ணீர் குடிக்கும் அளவை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது. 
சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. அதீத சர்க்கரை உள்ளவர்கள் மூன்று வேளைக்குப் பதிலாக ஐந்து அல்லது ஆறு வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.
கோடை காலங்களில் குளிர்பானங்கள் பருகுவதை அறவே தவிர்க்க வேண்டும். குளிர்பானங்களில் உள்ள அதிகப்படியான சர்க்கரை, ரத்தச் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். அதற்கு மாற்றாக இளநீர், நுங்கு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
உடல் வறட்சி ஏற்படுத்துவதில் 'ஆல்கஹால்' முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, குடிப்பழக்கத்தைக் கைவிட வேண்டும். மதுவை கார்போனேட்டட் குளிர்பானங்களுடன் கலந்து அருந்துவதால் நீர் வறட்சி மேலும் அதிகமாகும்.
கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் வெயில் காலங்களில் உடற்பயிற்சி செய்வதை சற்று குறைத்துக்கொள்ள வேண்டும்.
சீரகத் தண்ணீர் அருந்துவதால் உடல் சூடு தணியும்.


நீர் நிலைகளில் வறட்சி ஏற்பட்டால் உலகுக்கு ஆபத்து.. உடல் வறட்சி ஏற்பட்டால் உயிருக்கு ஆபத்து..!
 

- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ