Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெறிநாய்க்கடி உயிரிழப்பைத் தவிர்க்கலாம்! #WorldRabiesDay

 

ஒவ்வொரு ஆண்டும் ரேபிஸ் தொற்றால் ஏராளமானவர்கள் உயிரிழக்கின்றனர். ரேபிஸ் பற்றி மக்களுக்கு சரியான விழிப்பு உணர்வை ஏற்படுத்தி, ரேபிஸ் நோயில் இருந்து மக்களைக் காக்க, உலக நாடுகள் முழுவதும் செப்டம்பர் மாதம் 28 - ஆம் தேதி ‘சர்வதேச ரேபிஸ் தினம்’ கொண்டாடப்படுகிறது. ரேபிஸ் நோய்க்குத் தடுப்பு மருந்துக் கண்டுபிடித்த லூயி பாஸ்டர் மறைந்த தினம் செப்டம்பர் 28. இவர் நினைவாக, 2007 - ம் ஆண்டில் இருந்து சர்வதேச ரேபிஸ் விழிப்பு உணர்வு தினம் கொண்டாடப்படுகிறது.

2030 - ம் ஆண்டுக்குள் ரேபிஸ் கிருமித்தொற்றால் ஒரு மனிதன் கூட உயிரிழக்கவில்லை என்ற இலக்கை அடையும் நோக்கில், உலக ரேபிஸ் விழிப்புஉணர்வு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, இதற்காக ஒவ்வொரு தனிநபர் மற்றும் அமைப்புகளும் இந்த இலக்கை அடைய முக்கிய பங்காற்ற வேண்டும் என்ற மையக் கருத்தில் ரேபிஸ் தினம் கொண்டாடப்படுகிறது.

ரேபிஸ் வைரஸ்


‘ரேபிஸ் வைரஸ்’ என்பது ரேப்டோ வைரஸ் குடும்பத்தைச் சார்ந்த ஒரு வைரஸ் ஆகும். ரேபிஸ் வைரஸ் நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகளில் வாழும் ஒட்டுண்ணியாகும். தற்போது, ரேபிஸ் வைரஸானது குதிரை, வவ்வால் போன்ற பாலூட்டிகளிலும் காணப்படுகிறது. ரேபிஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட விலங்குகள் மனிதனைக் கடிப்பதன் மூலம், நேரடியாக மனிதனுக்கு ரேபிஸ் தொற்று ஏற்படுகிறது. இந்தியாவில், பெரும்பாலும் நாய்கள் மூலமாகவே "ரேபிஸ் நோய்" மனிதனுக்குப் பரவுகிறது. இது நரம்புமண்டலத்தைத் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்.

ரேபிஸ் அறிகுறிகள்:

ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்ட மனிதனுக்கு அதிக காய்ச்சல், கடும் தலைவலி மற்றும் பதற்றம் காணப்படும். மார்பு மற்றும் தொண்டைப் பகுதியில் காணப்படும் தசைகளில் நடுக்கங்கள் காணப்படும். ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட மனிதனுக்கு ஹைட்ரோஃபோபியா எனப்படும் நீரைக் கண்டால் வெறுக்கும் தன்மை தோன்றும். மன அழுத்தம், கவனச்சிதறல், உடல் உறுப்புகள் செயல் இழப்பு மற்றும் அளவுக்கு அதிகமான எச்சில் சுரத்தல் போன்றவை ரேபிஸ் நோயின் முக்கியமான அறிகுறிகள் ஆகும். மேற்கண்ட அறிகுறிகள் ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்ட மூன்றாவது வாரத்தில் இருந்து எட்டாவது வாரத்துக்குள் தெரியவரும். சிலருக்கு இதன் காலங்களில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

ரேபிஸ் நோய் தடுப்பு முறைகள் :

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 1.5 கோடி பேர் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். வெப்ப மற்றும் மிதவெப்ப நாடுகளில் ரேபிஸ் நோய் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20,000 பேர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, குழந்தைகள்தான் ரேபிஸ் நோயால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால், வீட்டு விலங்குகளிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும். வீட்டு விலங்குகள் குழந்தைகளைத் தாக்கினாலோ, கடித்தாலோ நமக்குத் தெரிவிக்கப் பழக்கப்படுத்த வேண்டும். இதன்மூலம், குழந்தைகளுக்கு ரேபிஸ் ஏற்படுவதை வெகுவாகக் குறைக்கலாம். 
வீடுகளில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகளுடன் கவனமாகப் பழக வேண்டும். அதன் செயல்களில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான சிகிச்சை அளிக்க வேண்டும். இறந்த விலங்குகளில் இருந்தும் ரேபிஸ் பரவலாம் என்பதால், அவற்றைக் கவனமாகக் கையாள வேண்டும். வீட்டு விலங்குகளுக்கு உரிய காலத்தில் ரேபிஸ் தடுப்பூசிகளைப் போட வேண்டும். 


ரேபிஸ் வைரஸ் பாதிக்கப்பட்ட விலங்குகள் நம்மைக் கடித்த 48 மணி நேரத்தில் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட வேண்டும். ரேபிஸ் பாதிக்கப்பட்ட பின் சரியான முதலுதவியும் சிகிச்சையும் எடுக்கவில்லை என்றால் இறப்பு நிச்சயம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, விழிப்புடன் இருப்போம் ரேபிஸில் இருந்து விடுபடுவோம்.

 

 

- லோ.பிரபுகுமார்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ