Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குழந்தைகளின் ஸ்நாக்ஸ்... எது வேண்டும்... எது வேண்டாம்?

 

"பிரிக்க முடியாதது எதுவோ?" என்று திருவிளையாடல் டயலாக் போல கேட்டால், 'குழந்தைகளும் ஸ்நாக்ஸும்' என்றுதான் பதில் வரும். அந்தளவுக்கு குழந்தைகள் தின்பண்டங்களை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் அவை உடலுக்கு ஆரோக்கியமானதாக இருக்கிறதா?

குழந்தைகள் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்ததும் அவர்கள் விரும்பிச் சாப்பிடும், சீடை, தட்டை, அடை, பனியாரம் என சத்தான உணவுகளை முன்கூட்டியே தயாரித்து வைத்திருந்து பரிமாறினார்கள் நன் முன்னோர்கள். காலப்போக்கில் கடைகளில் நொறுக்குத் தீனிகள் விற்க ஆரம்பித்ததும், குழந்தைகளும் கடைத்தீனியின் மீது மோகம் கொள்ள ஆரம்பித்தனர். சத்தில்லாத இந்த உணவுகள் ’ஜங்க் ஃபுட்’ என்று அழைக்கப்படுகிறது. ஜங்க் ஃபுட் சாப்பிடும் குழந்தைகளுக்கு வைட்டமின் குறைபாடு ஏற்படுவதுடன் பசியின்மை, மந்தநிலை, மலச்சிக்கல், பற்சொத்தை, அஜீரண கோளாறு, சீக்கிரம் பூப்படைதல் உள்ளிட்ட பிரச்னைகள் நிகழ்வதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

குழந்தைகளின் உணவுப் பழக்கவழக்கம் குறித்த புரிதல் முதலில் பெற்றோரிடம் இருந்து துவங்க வேண்டும். முன்பெல்லாம் குழந்தைகள் தன் தேவைக்கு ஒரு பொருளைக் கேட்டால் அதன் நன்மை, தீமை அறிந்து வாங்கிக் கொடுப்பார்கள் பெற்றோர்கள். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் குழந்தை அடம் பிடிக்கிறது என்பதற்காகவே கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்துவிடுகிறார்கள். பெற்றோர்களுக்கும் நல்ல உணவை சமைப்பதற்கான நேரமின்மையால் ஃபாஸ்ட், ஃபுட், ஜங்க் ஃபுட் இவையெல்லாம் நம் உணவில் ஆதிக்கம் செலுத்துகின்றன. பசியோடு களைத்து வரும் குழந்தைகளின் மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்கு தேவையான நல்ல உணவைக் கொடுப்பது பெற்றோரின் கடமை.

சரி, குழந்தைகளுக்கு எதெல்லாம் கொடுக்கலாம் கொடுக்கக் கூடாது என்பதை தெரிந்து கொள்ள கீழே  கிளிக் செய்யுங்கள்.

 

-பொன்.விமலா

எடிட்டர் சாய்ஸ்

MUST READ