Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதியவர்கள், நோயாளிகளுக்கு கழிப்பறை கட்டில்!

ன் பெயர் குருமூர்த்தி, சொந்த ஊர் திருவள்ளூர். சின்னவயசுல இருந்தே சித்தினா உசுரு, சித்தப்பா இறந்த பிறகு, சித்திக்கு யாரும் இல்ல, அவுங்களுக்கு வயசானதால உடம்பும் ரொம்ப முடியல அதனால என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன், என் மனைவிதான் அவுங்கள பாத்துகிட்டாங்க. ஒருமுறை கட்டில்ல இருந்து கீழ விழுந்து கை கால் வராம போயிடுச்சு, படுத்தபடுக்கையாகிட்டாங்க. மாமியாரையே தொல்லையா நினைக்கிற மருமகள்கள் இருக்குற இந்த காலத்துல என் மனைவி, என் சித்திய முகம் சுளிக்காம பாத்துகிட்டாங்க, முக்கியமா அவுங்களால கட்டிலவிட்டு இறங்கி பாத்ரூம் போக முடியாது, எல்லாமே பெட்பேன்ல தான். எதுவேனா செய்யலாம், ஆனா மலம் அள்ளுறது ரொம்பவே கஷ்டம் தான். இதுக்கு என்ன வழினு யோசனைல இருந்தபோதுதான்,  நாகர்கோவிலைச் சேர்ந்த சரவணமுத்துங்கிறவரு ஒரு சின்ன மாடல் கழிப்பறையோடு சேர்ந்த கட்டில வடிவமைச்சி இருக்காருனு நியூஸ் பேப்பர்ல படிச்சேன். உடனே அந்த நிறுவனத்துக்கு பேசி சரவணமுத்துவ புடிச்சேன். சித்திக்காக கழிப்பறை கட்டில் வேணும்னு கேட்டேன், அதுக்கு சரவணன், ''சார் எனக்கு அந்த அளவு வசதி இல்லாததாலதான் சின்ன மாடல் செஞ்சேன், அதுதான் பேப்பர்ல போட்டாங்க, எனக்கு கொஞ்சம் பொருள்மட்டும் வாங்கி கொடுங்கனு'' கேட்டார், இப்போ நல்லபடியா பண்ணி கொடுத்துட்டாரு.

''நான் மூணாவது வரைக்கும்தான் படிச்சேன், நாகர்கோவில்ல வெல்டிங் ஷாப் வச்சிருக்கேன். என் பட்டறைல சவாலான வேலைங்க நிறைய வரும், கஷ்டமா இருந்தாலும், எனக்கு புதுசுப்புதுசா யோசிச்சி வேலை பார்க்கறது ரொம்பப்புடிக்கும் ஆர்வமா பண்ணுவேன். இதுவரைக்கும் சின்னச்சின்னதா நிறைய பொருட்கள் செய்து இருக்கேன். ஸ்கூல், காலேஜ் ப்ராஜெக்ட்டுக்காக பசங்க நிறைய வருவாங்க நானும் பண்ணி கொடுப்பேன். ஆனா எதுவுமே பெரிய லெவல்ல பண்ண முடியல காரணம், செலவு அதிகமாகும்.

வீட்ல வயசானவங்களோ இல்ல விபத்துல மாட்டிக்கிட்டவங்களோ யார் படுத்த படுக்கையாகிட்டாலும் அவுங்க சந்திக்கிற முதல் பிரச்னை, சிறுநீர், மலம் கழிப்பதுதான். கட்டில விட்டு இறங்கவும் முடியாது, ஒவ்வொரு முறையும் மத்தவங்கள கூப்பிடவும் கூச்சப்படுவாங்க, வீட்டுல இருக்குறவங்களும் சங்கடத்துல ரொம்ப கஷ்டப்பட்டு செய்வாங்க. என் மனைவி படுத்த படிக்கைல இருந்தப்ப தான் அதோட வலி எனக்கு தெரிஞ்சுது, நம்ப கண்டிப்ப எதனா செய்யனும்னு முடிவுல இருந்தேன்.

நான் சும்மா மாடலா பண்ண கழிப்பறை கட்டில பாத்துட்டு குருமூர்த்தி கேட்டப்போ, எப்படியாவது பண்ணனும்னு முடிவெடுத்துட்டேன், என்கிட்ட யோசனை இருக்கு அவருக்கு தேவை இருக்கு சரி முயற்சி செய்யலாம்னு செய்தேன்.

கட்டிலுக்கு கீழ்பகுதியில பேஷன வச்சிட்டேன், ஸ்விட்ச்  கண்ட்ரோல் மூலம்  ஆட்டோமெடிக்கா பேஷன் மேல வரும், திரும்பவும் கீழ போயிடும், ஆட்டோ பிளஷ் டைப், 12 வோல்ட் பேட்டரில இயங்குற மாதிரி ரொம்ப எளிமையா வடிவமச்சி இருக்கேன் . இந்த கட்டில வாட்டர் பைப் மூலம் பிட் பண்ணிட்டா போதும்.

முதியோர் இல்லம்ல எவ்ளோ முதியவர்களுக்கு பாத்ரூம் போக முடியாது, பிடிச்சு வச்சி மொத்தமா வெளிய போடுவாங்க, மருத்துவமனைல நோயாளிகள் எவ்ளோ கஷ்ட்டப்பட்றாங்க, இவுங்க எல்லாருக்கும் என் கட்டில் நிச்சயமா மிகப்பெரிய வசதியை ஏற்படுத்தித் தரும்.

 

 

இந்த கட்டிலுக்கு பேட்டண்ட் வாங்கலாம்னு ரொம்ப நாலா முயற்சி பண்றேன். அதிகாரிகள் எப்படியாவது நடவடிக்கை எடுக்கணும். தாமதிக்காம கிடைச்சா நிறைய நபர்களுக்கு பயன்படும். இந்த கட்டில்ல இன்னும் நிறைய மாற்றம் செய்யணும், கட்டில் மேல பெட் போட்டாலும் பயன்படுத்தர மாதிரி பண்ணலாம்னு இருக்கேன், அது ரொம்ப சுலபம், முக்கியமா நோய் தொற்று நினைச்சி பயமே வேண்டாம். இதுல கிருமி நாசினிக்கு கூடுதலா ஒரு ஓஸ் போட்டா போதும் அதுவே க்ளீன் பண்ணிடும். இன்னும் சில டாக்டருங்க யாரையாச்சும் பார்த்து அவுங்ககிட்டயும் சில யோசனை கேட்கலாம்னு'' இருக்கேன். வாழ்த்துகள் சரவண முத்து.

- ஜோ.கார்த்திக்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ