Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னைக்கு  அருகில் சக்கர நாற்காலி தொழிற்சாலை!

 

பெல்ஜியம் நாட்டில், மாற்றுத்திறனாளிகளுக்கான  சக்கர நாற்காலி தயாரிக்கும்  ஒரு நிறுவனம்   ‘வெர்மெய்ரன்’. இது, இந்தியாவில் தன்னுடைய முதல் உற்பத்தி ஆலையை, சென்னையை அடுத்துள்ள, ஆந்திராவின் தடா - ஸ்ரீ சிட்டியில் துவங்கியுள்ளது.


முதல் கட்டமாக, 40 கோடி ரூபாய் செலவில் 75,000 சதுர அடி பரப்பளவு கொண்ட உற்பத்தி நிலையம் ஒன்றை அமைத்துள்ளது, இந்த நிறுவனம். இந்த யூனிட் மூலம் ஆண்டுக்குச் சுமார் 14,000 சக்கர நாற்காலிகள் தயாரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிறுவனத்தின் துவக்கவிழா, சமீபத்தில் தடாவில் நடைபெற்றது. இதில், ஆந்திர மாநிலத்தின் சுகாதார மற்றும் மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் காமினெனி ஸ்ரீனிவாஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தொழிற்சாலையைத் தொடங்கிவைத்தார்.
இது குறித்து அவர் பேசுகையில், “இந்தச் சக்கர நாற்காலிகள் தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமின்றி, மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கும், முதியோர்களுக்கும்கூட  அத்தியாவசிய தேவையாக  உள்ளது. ஆனால், நல்ல தரமான சக்கர நாற்காலிகள் பெரும்பாலான இடங்களில் இல்லை. இந்த நிலையை வெர்மெய்ரன் நிறுவனத்தின் தயாரிப்புகள் மாற்றும்  என்று நம்புகிறேன்” என்றார் உற்சாகமாக.


வெர்மெய்ரன் நிறுவனத்தின் தலைமை நிர்வாகஅதிகாரி திரு.பேட்ரிக் வெர்மெய்ரன் பேசுகையில்,  “மிகவும் மகிழ்ச்சியான நேரம் இது. எங்களுடைய முதல் உற்பத்தி நிலையத்தை  இந்தியாவில் தொடங்கி உள்ளோம் .2020-ம்  ஆண்டுக்குள் 1,50,000  சக்கர நாற்காலிகளும்,  25,000 மருத்துவமனைப்படுக்கைகளும் தயாரிக்க வேண்டும் என்பது எங்கள் இலக்கு” என்றார்.
இந்த  நிகழ்ச்சியில், ஸ்ரீசிட்டியின் நிறுவனர் ரவீந்திர சனாரெட்டி, பெல்ஜியம் நாட்டின் தூதரக அதிகாரிகள் மற்றும் வெர்மெய்ரன் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தத் தொழிற்சாலையினால் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலருக்கு வேலை வாய்ப்பு பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- அ.முகமது யூசுப்  (மாணவப்  பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ