Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வைரலாகப் பரவும் ”ஸ்லோ குக்கர்” சமையல்!

'ஸ்லோ குக்கர்'  மூலம் சமைக்கப்படும் உணவுகளில் பயன்படுத்தப்படும் காய்கறிகள், மற்றும் இறைச்சிகளிலுள்ள சத்துக்கள் அப்படியே  கிடைக்கிறது என தெரியவந்துள்ளது. குறைவான உணவை உட்கொண்டு அதன் மூலம் அதிக சத்துக்களை பெறும் உணவு முறைகளில் ஸ்லோ குக்கர் செய்முறைகளையே அதிகம் பரிந்துரை செய்கின்றனர். ஆனால் இன்னும் கோயம்புத்தூர் தொழில் அதிபர்களின் கண்களில் படாத காரணத்தாலே என்னவோ ஸ்லோ குக்கர் விலை நடுத்தர மக்களுக்கு கட்டுப்படியாகாத வகையில் உள்ளது. இருப்பதிலேயே விலைக்குறைவான 'ஸ்லோ குக்கர்' நான்காயிரத்துக்கு விற்கிறது. ஆனால் நம் வீட்டிலுள்ள இன்டக்சன், மைக்ரோவேவ் அவன் போன்றவற்றுடன் ஒப்பிட்டால் பல மடங்கு குறைவான  மின்சாரமே தேவைப்படுகிறது. உடல்நலத்துக்கு முன்னுரிமை கொடுப்பேன் என்கிற எண்ணமுள்ளவர்கள் இந்த அடுப்பை வாங்கலாம்.

 

 

ஸ்லோ குக்கரின் மூலம் செய்யப்படும் ஆட்டு எலும்புச்சாறு (போன் ப்ராத்)  பல்வேறு பயன்களை கொண்டுள்ளது. நம் உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் இதிலுள்ள சத்துக்கள் வெகுவாக பயன்படுகின்றன. எலும்புகளை இணைக்கும் மூட்டுக்களுக்கு, ரத்தத்தை சுத்திகரிக்கும் ஈரலுக்கு, ரத்தம் உற்பத்தியாகும் எலும்பு மஜ்ஜைகளுக்கு, உணவை செரிமானம் செய்து சத்துக்களை பிரிக்கும் குடலுக்கு என எலும்பு சாறு கொடுக்கும் பயன்கள் அலாதியானவை. ஆட்டுக்கறியை விட குறைவான விலையில் கிடைக்கும் ஆட்டு எலும்புகளை கொண்டு ஸ்லோ குக்கரில் சாறு செய்யும் வெகு சிம்பிள் ரெசிப்பி  இதோ-

 

1/4 கிலோ ஆட்டு எலும்பு

சின்ன வெங்காயம் - 10  ( சின்ன வெங்காயம் என்றால் 10 பெரிய வெங்காயம் என்றால் ஒன்று போதும் )

பூண்டு      - 5  (பெரிய பல்)

தக்காளி  - 2 ( அரிந்து கொள்ளவும் ) 

மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி

மல்லித்தழை - சிறிதளவு

உப்பு -  அரை தேக்கரண்டி போதும்

இவற்றை ஸ்லோ குக்கருடன் வரும் கல்லால் ஆன பாத்திரத்தில் இட்டு நீர் ஊற்றவேண்டும். சரியாக எலும்புகள் மூழ்கும் அளவுக்கு நீர் ஊற்றுவதுதான் போதுமான அளவு. லோ - ஹை - வார்ம் ஆகிய மூன்று ஆப்ஷன்களில் லோ ஆப்ஷனில் 8 மணி நேரம் வைக்க வேண்டும்.  

 

எட்டு மணி நேரம் கழித்து அப்படியே எடுத்து நன்றாக வடிகட்ட வேண்டும். வெந்த எலும்புகளும் மற்றவையும் இனி தேவையில்லை. இப்போது சுத்தமான எலும்புச்சாறு ரெடி. நன்றாக மூடக்கூடிய பாட்டிலில் மூடி பிரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம். தினமும் 200 மிலி குடித்து வந்தால் மிகவும் நல்லது. தேவைப்பட்டால் சூடுபடுத்தி மிளகு தூவி குடிக்கலாம்.  

 

 

ஆர்த்தட்டிஸ் போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கு அதற்கனெ எடுக்கும் மருந்துகள் கொடுக்கும் பயனை விட அதிக பயன் கொடுக்ககூடியது இந்த எலும்புச்சாறு. காய்கறிகளில் இருந்து கிடைக்கும் கால்சியம் நமது உடலில் சேர்வதில்லை. அவை நமது உடலால் செரிக்க முடியாமல் வெளியேறிவிடுகின்றன. ஆனால் இறைச்சிகளில் இருந்து கிடைக்கும் கால்சியமானது நம் உடலில் இணைந்து விடுகின்றன. காரணம் அவை ஏற்கனவே வேறொரு உடலில் ஏற்கும்படி மாற்றப்பட்டுவிட்டவை. எனவே கால்சியம் குறைபாடு போக்கவும், சீரண உறுப்புகள் சீராக இயங்கவும் இந்த எலும்புச்சாறு மிகவும் உதவிகரமாக இருக்கிறது. 

ஸ்லோ குக்கர் என்னிடம் இல்லையே அல்லது இப்போதைக்கு வாங்க முடியாதே என்கிறீர்களா? உங்களுக்கென்றே இருக்கிறது ஒரு அதர் ஆப்ஷன். உங்களின் இன்டக்‌ஷன் அடுப்பையே ஸ்லோ குக்கராக மாற்றலாம். இப்போது வரும் செகன்ட் ஜெனரேஷன் இன்டக்‌ஷன்கள் எவ்வளவு டிகிரி வைக்கவேண்டுமோ அதை டிஸ்ப்ளையில் தெரியும் வகையில்தான் வருகின்றன. எனவே இருப்பதில் குறைவான அளவு ( 50 வாட்ஸ் முதல் 80 வரைதான் வைக்க வேண்டும்) வைத்து தண்ணீர் அளவை மட்டும் 300 மிலி சேர்த்து ஊற்றி வைத்துவிடலாம். கால அளவு இதிலும் அதே 8 மணி நேரத்தை மெயின்டெயின் செய்ய வேண்டும். இடையில் அவ்வப்போது பார்த்து தண்ணீர்  சுண்டி இருந்தால் ஊற்ற வேண்டும். அவ்வளவுதான்!

-வரவனை செந்தில்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close