Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மகிழ்ச்சியான தீபாவளியில்... கண்களைப் பாதுகாக்க 8 டிப்ஸ்

தீபங்களின் ஒளித் திருவிழா என்றால், அதிகப்படியான மகிழ்ச்சி, சந்தோஷம், உற்சாகம், கொண்டாட்டமோ கொண்டாட்டம். தீபாவளியன்று பட்டாசுகள், ரங்கோலி கோலம், விளக்கு அலங்காரம், நீண்ட நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பது என நாள்முழுக்க கண்களுக்கு அதிகப்படியான வேலை. பட்டாசு வெடிக்கும்போது​,​ கண்ணில் காயம் ஏற்படும்​.​ விளக்குகளை கவனக்குறைவாக கையாள்வது போன்ற காரணங்களால் விபத்துகள் நேரலாம். பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாட, கண்களைப் பாதுகாக்க​,​ பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை விஷயங்களைப் பின்பற்றவேண்டியது மிக மிக அவசியம்.

அடித்துப்பிடித்து, அதிக கட்டணத்தில் ஆம்னி பஸ்ஸை பிடித்தாவது சொந்த ஊர்களுக்குச் சென்று தீபாவளியை கொண்டாட கிளம்பியிருப்போம். இந்த மகிழ்ச்சியான வேளையில், கண்களைப் பாதுகாப்பதும் அவசியமல்லவா...! அதற்காக 8 டிப்ஸ்களைத் தருகிறார், பிரபல கண் மருத்துவர் ரஜினிகாந்தா.

( படத்தின் இடது, வலதுபுறங்களில் கிளிக் செய்து... அடுத்தடுத்த படங்களைப் பார்க்கலாம்)

 

​முதலுதவி

* கண்களில் விபத்து ஏற்பட்டால் நல்ல தண்ணீரில் கழுவிய உடனே டாக்டரிடம் செல்லுங்கள்.

*காயங்களின் மேல் தண்ணீர் ஊற்றலாம்.

*மை, மஞ்சள் தூள், பற்பசை, ஐஸ், எண்ணெய் ஆகியவற்றை காயங்களின் மேல் பூசக் கூடாது.

*பெரிய காயம் என்றால், உடனே ஆடைகளை நீக்கிவிட்டு சுத்தமான பெட்ஷீட்டைப் போர்த்தி மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள்.

கண் மருத்துவர் ரஜினிகாந்தா

அலெர்ட் டிப்ஸ்

* பட்டாசு வெடிக்கும்போது அருகில் இரண்டு பக்கெட்களில் தண்ணீர் வைத்திருப்பது நல்லது.

* பட்டாசு வெடிக்கும்போது நைலான், சிந்தடிக் ஆடைகளை அணிவதைத் தவிர்க்கவும்.

* பாக்கெட்டில் பட்டாசுகளை வைத்துக்கொள்ளக் கூடாது. கைகளில் வைத்து பட்டாசு வெடிப்பதை தவிர்க்கவும்.

* ராக்கெட்டுகளை திறந்தவெளியில்தான் வெடிக்க வேண்டும். அதுவும் பாட்டினுள் வைத்து வெடிக்கலாம். வீடுகள், குடிசைகள் இருக்கும் பகுதியில் ராக்கெட் வெடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

அனைவருக்கும்​....​ மகிழ்ச்சியான பாதுகாப்பா​ன​ தீபாவளி வாழ்த்துகள்!

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ