Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முள் இல்லாத மீனில் இருந்து... சுவையான ஃபிஷ் கட்லெட்! #WeekEndRecipes

                                                           

 

வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது  வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான ஃபிஷ் கட்லெட் அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி.

தேவையானவை:

மீன் - அரை கிலோ (முள் அதிகம் இல்லாத, அதிகம் சதைப்பற்றுள்ள ஏதாவது ஒருவகை மீன்)
பிரெட் - 3 துண்டுகள்
பச்சை மிளகாய்(பொடியாக நறுக்கியது) - 10 கிராம்
பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 200 கிராம்
எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்
ரொட்டித்தூள் - 50 கிராம்
கரம் மசாலாத்தூள் - இரண்டு டீஸ்பூன்  
கொத்தமல்லித்தழை - 50 கிராம்   
முட்டை - ஒன்று
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். முட்டையை உடைத்து ஒரு பவுலில் சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த மீனுடன் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். வெந்ததும் ஆறவிட்டு, முள் நீக்கி, சதைப் பகுதியை மட்டும் எடுத்து உதிர்க்கவும். 


பிரெட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து, பின்னர் நீரைப் பிழிந்து, உதிர்த்து வைத்திருக்கும் மீனுடன் சேர்க்கவும். அத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, எலுமிச்சை சாறு, உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கலக்கி வடைக்கு மாவு தயார் செய்வது போல கலக்கவும். இந்தக் கலவையை எலுமிச்சை அளவில் உருட்டி, தட்டையாகவோ அல்லது விருப்பமான வடிவிலோ செய்துவைக்கவும். அவற்றை முட்டைக் கலவையில் முக்கி எடுத்து, ரொட்டித்தூளில் புரட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான ஃபிஷ் கட்லெட் தயார். 

குழந்தைகளை ஜங்க் ஃபுட்டில் இருந்து மீட்கும் சுவையுடன் இருக்கும், இந்த ஃபிஷ் கட்லெட்!
                                                                                                                                                                                                                                               - கு.ஆனந்தராஜ், படங்கள் : த.ஸ்ரீநிவாசன் 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ