Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மட்டன் ரோகன் ஜோஸ்...பெயரை விடவும் சுவை வித்தியாசமானது! #WeekEndRecipes

                                 
வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது  வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான மட்டன் ரோகன் ஜோஸ் அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறையின் பேராசிரியர் கெளசிக்.

தேவையானவை:

மீடியம் அளவு சைஸ் மட்டன் துண்டுகள் - 500 கிராம் 
கிராம்பு - 3 
ஏலக்காய் - 5
இஞ்சி-பூண்டு விழுது - இரண்டு டேபிள்ஸ்பூன்
தயிர் - 3 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காய விழுது (எண்ணெயில் வதக்கி அரைக்கவும்) - 50 கிராம்
மிளகாய்த்தூள் - இரண்டு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
அரைத்த தக்காளி விழுது - 100 மில்லி
முந்திரிப்பருப்பு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
கொத்தமல்லித்தழை - சிறிதளவு  
எண்ணெய் - 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மட்டனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் ஏலக்காய், கிராம்பு சேர்த்து வதக்கிய பின் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை அடுப்பை சிம்மில் வைத்து வதக்கவும். பின்னர் மட்டன், தயிர், உப்பு, வெங்காய விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.  கலவை நன்றாக வெந்ததும் அதனுடன் தக்காளி விழுது சேர்த்து கொதிக்கவிட்டு, பின் முந்திரி விழுதைச் சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும். கலவையை நன்கு கலக்கிவிட்டு, கரம் மசாலாத்தூள் சேர்க்கவும். 10 நிமிடங்கள் வரை மூடி வைத்து வேகவிடவும். இடைப்பட்ட நேரத்தில், 5-10 மில்லி வெண்ணீரில் குங்குமப்பூவை சேர்த்து நன்றாகக் கலக்கி, அந்நீரை அடுப்பில் இருக்கும் மட்டன் கலவையில் சேர்த்து நன்றாகக் கலக்கி, நறுக்கிய கொத்துமல்லித்தழையை தூவி  இறக்கவும்.

சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை வகை உணவுகளுடன் மட்டன் ரோகன் ஜோஸினை சேர்த்துச் சாப்பிடலாம்.
                                                                                                                                                                                                        - கு.ஆனந்தராஜ்

                                                                                                                                                                                                  படம்: த.ஶ்ரீநிவாசன்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ