Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சண்டே சந்தோஷத்துக்கு மலபார் மீன் குழம்பு! #WeekendRecipes

                                                              மீன்குழம்பு

வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது  வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான மலபார் மீன்குழம்பு அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி.

தேவையானவை:
மீன் - 300 கிராம்(அதிக முள் இல்லாத, அதிக சதைப்பற்றுள்ள ஏதாவது ஒருவகை மீன்)   
தேங்காய் - 100 கிராம்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்   
இஞ்சி(பொடியாக நறுக்கியது) - ஒரு டீஸ்பூன் 
பச்சை மிளகாய்(கீறியது) - 2 
புளிக்கரைசல் - 3 டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம்(சிறியதாக நறுக்கியது) - 10 கிராம்
கடுகு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
மீடியம் அளவுத் துண்டுகளாக இருக்கும் மீனை, நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். தேங்காயுடன் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும். 

அடுப்பில் மண் சட்டி அல்லது வாணலி வைத்து தேங்காய் விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், புளிக்கரைசல் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கிவிட்டு கொதிக்கவிடவும். கொதி வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, மீன் துண்டுகளைச் சேர்த்துக் கலக்கிவிடவும். பின்னர் மூடிபோட்டு வேகவிடவும். 

மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு தாளித்து, பின் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்நிறமாக ஆனவுடன் இவற்றை மீன்குழம்புக் கலவையில் சேர்த்துக் கிளறி, சிறிது நேரம் கழித்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

மலபார் மீன்குழம்பை சாதத்துடன் சூடாகப் பரிமாற, ருசி மறுசோறு கேட்கவைக்கும். 

- கு.ஆனந்தராஜ்
படம் : த.ஶ்ரீநிவாசன்

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close