Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மட்டன்....உருளைக்கிழங்கு....சுவையான மட்டன் வின்டாலு! #WeekEndRecipe

                                                         மட்டன் வின்டாலு             

வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது  வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான மட்டன் வின்டாலு அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி.                                                 

தேவையானவை:
மட்டன் - அரை கிலோ  
உருளைக்கிழங்கு - 200 கிராம் 
தக்காளி - 100 கிராம் 

விழுதாக அரைக்க: 
பெரிய வெங்காயம் - 50 கிராம்
இஞ்சி - 10 கிராம்
பூண்டு - 15 கிராம்
காய்ந்த மிளகாய் - 8 கிராம் 
முழுமல்லி(தனியா) - 5 கிராம்
சீரகம் - அரை டீஸ்பூன் 
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
பட்டை - ஒரு துண்டு
வினிகர் - 4 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
தண்ணீர் - சிறிதளவு(தேவைபட்டால்)
எண்ணெய் - 30 மிலி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
உருளைக்கிழங்கு, தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மட்டனை மீடியம் சைஸ் பீஸ்களாக நறுக்கி, நன்கு கழுவி சுத்தம்செய்து கொள்ளவும். 

விழுதாக அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து, அந்த மசாலாவில் மட்டனைப் புரட்டி அரை மணி நேரம் ஊறவைக்கவும். 

அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடாக்கி, அதில் ஊற வைத்த மாசாலா மட்டனைச் சேர்த்து வதக்கவும். தேவைப்பட்டால் கலவையுடன் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். 

மட்டனுடன் நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் வெந்நீர் சேர்த்து, வாணலியை மூடி போட்டு மட்டனை நன்கு வேகவிடவும். கிரேவி சிறிது கெட்டியானவுடன், கொத்தமல்லித்தழை தூவி சூடாகப் பரிமாறவும். 

சாதம், இட்லி, தோசை, சப்பாத்திக்கு இந்த மட்டன் விண்டாலு நல்ல காம்பினேஷனாக இருக்கும்.

குறிப்பு:
* மட்டனுடன் மசாலா  சேர்த்தபின்னர் தேவைப்பட்டால் தண்ணீர் சிறிதளவு சேர்க்கலாம். மசாலாவை சேர்க்கும் முன்பே தண்ணீர் சேர்த்தால், மசாலா பச்சை வாசனையுடன் இருப்பதுடன், சுவையும் குறைந்துவிடும்

* மட்டன் கலவையில் உப்பு சேர்த்ததும் வெந்நீர் சேர்ப்பதால் கலவை சீக்கிரமாக வெந்துவிடும். பச்சைத் தண்ணீர் சேர்த்தால், கலவை மீண்டும் சூடாகி தயாராக நேரம் அதிகமாகும்.

- கு.ஆனந்தராஜ்
படம்: த.ஶ்ரீநிவாசன்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ