Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குளிர்காலத்தில் குழந்தைகளின் லஞ்ச் பேக்கில் அவசியம் இடம்பெற வேண்டியவை!

குழந்தை

குளிர்காலம் வந்துவிட்டாலே  சளி, இருமல், காய்ச்சல் என குழந்தைகள் அதிக நோய்த்தாக்குதல்களுக்கு ஆளாவார்கள். காரணம், இந்த சீதோஷண நிலையில் நுண்கிருமிகள் வீரியமாகச் செயல்படும். எனவே, அவற்றை எதிர்கொள்ள குழந்தைகளுக்கு அதிக ஆற்றலும் நோய் எதிர்ப்பு சக்தியும் தேவைப்படும். அவற்றை ஆரோக்கியமான உணவுகளின் மூலம் குழந்தைகளைப் பெறச் செய்யலாம்.

''குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த வைட்டமின் சி, வைட்டமின் இ, பீட்டா கரோட்டீன் சத்துகள் அடங்கிய உணவுகளைக்  கொடுக்கவேண்டும். குறிப்பாக, பள்ளிக்குக் கொடுத்தனுப்பும் ஸ்நாக்ஸுக்கு நொறுக்குத் தீனி தவிர்த்து இந்த சத்துகள் அடங்கிய பழம் மற்றும் பயறு வகைகளைக் கொடுத்தனுப்பலாம்'' என்று சொல்லும் ஊட்டச்சத்து நிபுணர் தாரணி கிருஷ்ணமூர்த்தி, குளிர் காலத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டிய உணவுகளைப் பரிந்துரைத்தார்...

''* சிட்ரஸ் பழங்கள் அதிகம் கொடுக்கலாம். அதாவது சாத்துக்குடி, எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்காய், ஸ்ட்ராபெரி  போன்ற விட்டமின் சி நிறைந்த பழங்களுடன், கொய்யா, மாதுளை போன்ற பழ வகைகளையும் தினமும் கொடுத்துவர, நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

*முளைகட்டிய பயறு, பாசிப்பயறு, வேர்க்கடலை, மூக்கடலை போன்றவற்றை வேகவைத்து கொடுத்தனுப்பலாம். இவற்றிலும் விட்டமின் சி உள்ளது.

* நிறமிக்க காய்கறிகளில் பீட்ரூட், கேரட், சிவப்பு முள்ளங்கி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றில் அதிக  பீட்டா கரோட்டீன் சத்து இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தி தரவல்லது.

* நட்ஸ், முட்டை, கோழி, சோயா பீன்ஸ் போன்றவற்றில் விட்டமின் இ அதிகளவில் உள்ளது. இது உடலின் ஆற்றல் அதிகரிக்க உதவும்.

* கம்பு, சோளம், வரகு, சாமை, கேழ்வரகு போன்ற சிறுதானியங்களை மாவாக்கி தோசையாகவும், ரொட்டியாகவும் சமைத்து தந்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். இதில் புரதச்சத்து, மாவுச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

* சூப், இது குளிர்காலத்துக்கு ஏற்ற கதகதப்பான உணவு. மாலை பள்ளி விட்டு வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு, வெதுவெதுப்பான சூட்டில், சிறிது மிளகுத்தூள் தூவிய காய்கறி சூப் கொடுக்கலாம். இது சளித் தொந்தரவுகள் வராமல் தவிர்க்கும் என்பதோடு குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

* மீன், குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய முக்கிய உணவு. இதில் நிறைந்துள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடல் சக்தியை (மெட்டபாலிஸம்) சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. அதனால் வாரத்துக்கு ஒருமுறை குழந்தைகளுக்கு மீன் கொடுக்கலாம்.

நோய் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு மேற்சொன்ன உணவுகளை மருத்துவர் ஆலோசனை பெற்று கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது'' என்கிறார் தாரணி கிருஷ்ணமூர்த்தி.

ஆரோக்கிய உணவுகள் தந்து, இந்தக் குளிர் கால நோவுகளிடம் இருந்து காப்போம் நம் குழந்தைகளை!

- என்.மல்லிகார்ஜுனா,
படங்கள்: பா.காளிமுத்து.

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ