Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஈசியாக செய்யலாம் தேங்காய் மட்டன் ஃப்ரை! #WeekEndRecipe

                                                                                                           மட்டன்

 

வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது  வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க,மட்டன் அசத்தலான தேங்காய் மட்டன் ஃப்ரை(coconut mutton fry) அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைப் பேராசிரியர் கெளசிக்.
 

தேவையானப் பொருட்கள்:
தேங்காய் (சிறிய துண்டுகளாக நறுக்கியது) - 50 கிராம்
பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது) - 100 கிராம்
இஞ்சி-பூண்டு விழுது - 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன் 
கிராம்பு - 3 
பட்டை - ஒரு சிறிய துண்டு
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - 30 மில்லி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
மட்டனை மீடியம் சைஸ் பீஸ்களாக நறுக்கி, நன்கு கழுவி சுத்தம்செய்து கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து மட்டனுடன் கிராம்பு, பட்டை, இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும். 

மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும் துண்டுகளாக நறுக்கிய தேங்காயை சேர்த்து பொன்நிறமாக வறுக்கவும். 

பின் தேங்காய் உடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து கலவை பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும். 

 

 

 

பின் இதனுடன் வேக வைத்த மட்டன் கலவையை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து, கலவையில் தண்ணீர் சுண்டும்வரை வதக்கவும். கரம் மசாலாத்தூள் சேர்த்து கிளறி பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை சேர்த்து இறக்கினால் சுவையான தேங்காய் மட்டன் ஃப்ரை தயார்.
 

- கு.ஆனந்தராஜ்

படம் : த.ஶ்ரீநிவாசன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close