Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சுவையான முருங்கைக்காய் மட்டன் மசாலா....செய்யலாம் ஈஸியாக! #WeekEndRecipe

மட்டன்

வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது  வீக் எண்ட். விடுமுறைரோகினி சிக்கன் நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான முருங்கைக்காய் மட்டன் மசாலா அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி.

தேவையானவை:
மட்டன் - அரை கிலோ
முருங்கைக்காய் - 2 
பெரிய வெங்காயம் - 150 கிராம் 
இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 50 கிராம் 
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5 கிராம்   
முழுமல்லி(தனியா) - 10 கிராம்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
கசகசா - ஒரு டீஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
சோம்பு -  அரை டீஸ்பூன்  
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - 30 மிலி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:  
மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து, மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கவும். முருங்கைக்காயை மீடியம் சைஸ் துண்டுகளாகவும், வெங்காயத்தை பொடியாகவும் நறுக்கவும். தேங்காய்த்துருவலுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைக்கவும். காய்ந்த மிளகாய், முழுமல்லி(தனியா), சீரகம், கசகசா, மிளகு, சோம்பு ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைக்கவும். 

அடுப்பில் குக்கரை வைத்து மட்டன் துண்டுகளைச் சேர்த்து, அதனுடன் மஞ்சள்தூள், தண்ணீர் சேர்த்து மட்டனை நன்கு வேகவிட்டு இறக்கவும்.

அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் நறுக்கிய முருங்கைக்காயைச் சேர்த்து நன்கு வதக்கவும். பின் இஞ்சி - பூண்டு விழுது மற்றும் அரைத்து வைத்திருக்கும் மசாலாவைச் சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.

மசாலா நன்கு செட் ஆனதும் வேகவைத்த மட்டன், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின் தேங்காய் விழுதைச் சேர்த்துக் கலந்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிடவும். மட்டனுடன் மசாலா கலவை நன்கு கலந்து செட் ஆனதும், நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி சூடாகப் பரிமாறவும்.

சாதம், சப்பாத்திக்கு, இந்த முருங்கைக்காய் மட்டன் மசாலா மிகவும் சுவையாக இருக்கும்.

- கு.ஆனந்தராஜ்
படம்:த.ஶ்ரீநிவாசன்

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close